/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டோரத்தில் கட்டடக்கழிவு; மறுச்சுழற்சிக்கு திட்டமிடணும்!
/
ரோட்டோரத்தில் கட்டடக்கழிவு; மறுச்சுழற்சிக்கு திட்டமிடணும்!
ரோட்டோரத்தில் கட்டடக்கழிவு; மறுச்சுழற்சிக்கு திட்டமிடணும்!
ரோட்டோரத்தில் கட்டடக்கழிவு; மறுச்சுழற்சிக்கு திட்டமிடணும்!
ADDED : டிச 03, 2024 06:20 AM
பொள்ளாச்சி; ஆற்றுப்படுகைகளிலும், ரோட்டோரங்களிலும் கொட்டப்படும் கட்டடக் கழிவில், மறுசுழற்சி செய்து, மாற்றுப் பொருள் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென, நகராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், பழைய கட்டடங்களை இடித்து புதுப்பிக்கும் பணிகளும், புதிதாக கட்டடம் கட்டும் பணிகளும் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது.
இதனால், ஏற்படும் கட்டடக் கழிவை இரவு நேரத்தில், ரோட்டோரத்திலும், ஆறு மற்றும் ஓடைகளிலும் கொட்டப்படுகிறது. கழிவுகள் கொட்ட தேவையான இடம் ஒதுக்கப்படாததால், நீர்நிலையை ஒட்டிய பகுதிகள், ஓடைகள் மற்றும் ரோட்டோரங்களில் கட்டட கழிவுகள் கொட்டுவதை சிலர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
எனவே, கட்டடக் கழிவை மறு சுழற்சி செய்து, மாற்று பொருள் உற்பத்தி திட்டத்தை நடைமுறைபடுத்த நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.
அப்போது, கட்டடக் கழிவுகளை குறிப்பிட்ட இடங்களில் கொட்டி, அவற்றை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து, மணல், சிறுஜல்லிக்கற்களை பிரித்தெடுக்கலாம்.
அவ்வகையில், மாற்று பொருள் உற்பத்திக்கான மையத்தை தனியார் வாயிலாக நிறுவ, நகராட்சியில் தீர்மானம் கொண்டு வரவேண்டுமென, கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.