ADDED : செப் 28, 2026 04:12 PM
கோவை: செல்வபுரம் செட்டிவீதியிலுள்ள செல்வசிந்தாமணி குளத்தை, வீ தி லீடர்ஸ் அமைப்பு தன்னார்வலர்கள் சுத்தம் செய்தனர்.
குளத்தினுள் கிடந்த பாலித்தீன் பை, தண்ணீர் பாட்டில்கள், அலுமினிய பாயிலை அப்புறப்படுத்தினர். குளத்துக்கு வரும் நீர் வழித்தடங்களில் உள்ள அடைப்பை சரிசெய்து அங்குள்ள கழிவுகளை மீனவர்கள் உதவியோடு சேகரித்தனர்.
குளத்தின் வடக்கு பகுதியிலுள்ள நீரூட்டு கால்வாய், தெற்கு பகுதியில் தண்ணீர் வெளியேறும் பகுதியில் தேங்கியிருந்த கழிவுகளை அப்புறப்படுத்தினர். குளக்கரைகளில் அமர்ந்து மது அருந்திவிட்டு அப்படியே போடப்பட்ட பாட்டில்களை அப்புறப்படுத்தினர்.
‘‘நமக்கான இந்த உலகத்தையும், இயற்கையையும் நாம் தான் சுத்தமாக வைக்க வேண்டும். அதற்காக நாம் குளத்தில் குப்பையை கொட்டாமல் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்,’’ என, வீ தி லீடர்ஸ் அமைப்பின் பாலாஜி உத்தமராமசாமி வேண்டுகோள் விடுத்தார்.
