/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தினக்கூலியை உயர்த்தி வழங்கணும்!
/
தினக்கூலியை உயர்த்தி வழங்கணும்!
ADDED : ஆக 26, 2025 10:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை; தமிழக வெற்றிக்கழக ஆலோசனைக்கூட்டம் வால்பாறை நகர செயலாளர் ஆண்ட்ரூஸ் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், வால்பாறை எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், 8:00 மணி நேரத்துக்கு மேலாக தொழிலாளர்களை பணி செய்ய அனுமதிக்ககூடாது. தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, கடந்த, 2021ல் தமிழக அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச கூலியான, 425 ரூபாய் பஞ்சப்படியுடன் சேர்த்து, 570 ரூபாயாக வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய சம்பளத்தை பெற்றுத்தர தொழிற்சங்கங்கள் போராட வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.