/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேறும் சகதியுமாக மாறிய சாலைகளை சீரமைக்கணும்
/
சேறும் சகதியுமாக மாறிய சாலைகளை சீரமைக்கணும்
ADDED : ஜூலை 07, 2025 10:54 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட நாச்சிமுத்து வீதி மழையின் போது, சாலை, சேறும் சகதியுமாகி மாறிவிடுவதால், மக்கள் சிரமம் அடைகின்றனர்.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான சாலைகள், போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகிறது. சாலையை சீரமைக்கும் பொருட்டு, அவ்வப்போது பள்ளங்கள் மூடப்பட்டாலும், மழையின் போது, குண்டும் குழியுமாக மாறி விடுகிறது.
மழையின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்காமல், ரோட்டின் நடுவே மண் அரிப்பு காரணமாக, பெரும் பள்ளங்கள் ஏற்படுகின்றன. அதிலும், நாச்சிமுத்து வீதியில் மழையின்போது, சேறும் சகதியுமாக மாறிவிடுவதால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.
மக்கள் கூறுகையில், 'நகரில், கந்தசாமி பூங்கா ரோடு, பத்ரகாளியம்மன் கோவில் ரோடு, தெப்பக்குளம் வீதி, ராஜாமில்ரோடு உள்ளிட்ட பல இடங்களில், ரோட்டில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. அவ்வபோது, ஜல்லிகற்கள், எம்.சாண்ட் கொண்டு பள்ளங்கள் மூடினாலும், மீண்டும் சாலைகள் சிதிலமடைந்து விடுகிறது. இதேபோல, நகராட்சிக்கு உட்பட்ட பல சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. அனைத்து சாலைகளையும் புதுப்பிக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், ' என்றனர்.