ADDED : டிச 04, 2024 09:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை; வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரண்டு வனச்சரகங்களிலும், வனத்துறை மற்றும் வருவாய்த்துறை நிலங்களில், யானை வழித்தடங்கள் அமைந்துள்ளன.
இந்த வழித்தடங்களை மறித்து அனுமதியின்றி கட்டடங்கள், தங்கும் விடுதிகள், ரிசார்ட்கள் அதிக அளவில் கட்டப்பட்டுள்ளன. கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, அகற்ற வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.