/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடை சீசன் முடியும் வரை கூடுதல் பஸ் இயக்கணும்!
/
கோடை சீசன் முடியும் வரை கூடுதல் பஸ் இயக்கணும்!
ADDED : மே 08, 2025 12:43 AM
வால்பாறை; கோடை சீசன் முடியும் வரை, கோவையில் இருந்து வால்பாறைக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறையின் இயற்கை அழகையும், வன விலங்குகளையும் கண்டு ரசிக்க சுற்றுலா பயணியர் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, தற்போது கோடை விடுமுறையில் குடும்பத்துடன் வால்பாறைக்கு வருகின்றனர்.
சுற்றுலா பயணியர் கூறுகையில், 'வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் பைக், கார் போன்ற வாகனங்களிலும் வருகின்றனர். வசதியில்லாத மக்கள் அரசு பஸ்களில் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக, கோவை, சேலம், கர்நாடகா, கேரளா, ஈரோடு உள்ளிட்ட பகுதியிலிருந்தும் வால்பாறைக்கு சுற்றுலா வருகின்றனர்.
அவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கோடை சீசன் முடியும் வரை கோவையில் இருந்து வால்பாறைக்கு கூடுதலாக நேரடி பஸ்கள் இயக்க வேண்டும்' என்றனர்.

