/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசின் சாதனைகளை மக்களிடம் சேர்க்கணும்!
/
அரசின் சாதனைகளை மக்களிடம் சேர்க்கணும்!
ADDED : மே 14, 2025 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சியில் தி.மு.க., செயற்குழு கூட்டம் நடந்தது. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமை வகித்தார். எம்.பி., ஈஸ்வரசாமி, உடுமலை தொகுதி பார்வையாளர் தமிழ்மறை, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தனசேகர், ஷியாம்பிரசாத், ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி தலைவர் அகத்துார்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரூராட்சி துணை தலைவர் சையது அபுதாஹீர் மற்றும் உறுப்பின்கள் பங்கேற்றனர். அதில், பொதுமக்களிடம், தி.மு.க., அரசின் சாதனை திட்டங்களை கொண்டு செல்ல வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற பாடுபட வேண்டும், என, கட்சி நிர்வாகிகள் பேசினர்.