/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'துணி கிழிந்தால்தான் எங்களுக்கு வருமானம்!'
/
'துணி கிழிந்தால்தான் எங்களுக்கு வருமானம்!'
ADDED : ஜூன் 29, 2025 12:46 AM

எதிர்பார்க்கும் வகையில் வாழ்க்கை அமைந்து விடாது; ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என்கிறார், சாலையோர டெய்லர் சபரிமுத்து.
கரூர் அருகே அரவங்குறிச்சியை சேர்ந்த இவர், பிழைப்புக்காக 1990ல் கோவை வந்தவர்.
''துணிகள் கிழிந்தால் தான் எனக்கு வருவாய். கிழிந்த துணிகளை தைத்து கொடுத்து, ஒரு நாளுக்கு ரூ.500ல் இருந்து ரூ.700 வரை வருவாய் ஈட்டுகிறேன்,''
''உங்கள் குடும்பம் பற்றி?''
''மனைவி, கல்லுாரி படிப்பு முடித்த மகள், மகன் உள்ளனர். நானும், மகனும் சுந்தராபுரத்தில் அறை எடுத்து தங்கியுள்ளோம். பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். வரும் வருவாயே, குடும்பத்துக்கு சரியாக இருக்கிறது. சேமிப்பு குறித்து நினைக்கவே இல்லை,''
''வாழ்க்கையை எப்படி பார்க்கிறீர்கள்?''
வெயில், மழை என எக்காலம் வந்தாலும், ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். நாம் எதிர்பார்ப்பது எல்லாம் வாழ்க்கையில் அமைந்து விடாது. வருவாய்க்கு ஏற்ப அமைத்துக் கொள்ள வேண்டியதுதான்,''.