/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பா.ஜ., அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி ஓட்டு சேகரிக்கணும்!'
/
'பா.ஜ., அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி ஓட்டு சேகரிக்கணும்!'
'பா.ஜ., அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி ஓட்டு சேகரிக்கணும்!'
'பா.ஜ., அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி ஓட்டு சேகரிக்கணும்!'
ADDED : நவ 17, 2025 01:08 AM

வால்பாறை: பா.ஜ., அரசின் சாதனைகளை வீடு தோறும் நேரடியாக சென்று எடுத்துச்சொல்லி, ஓட்டுக்களை சேகரிக்க வேண்டும், என, அறிவுறுத்தப்பட்டது.
வால்பாறையில் பா.ஜ., இளைஞரணி புதிய நிர்வாகிகள் அறிமுகக்கூட்டம் நடந்தது.
வால்பாறை பா.ஜ., இளைஞரணி புதிய நிர்வாகிகள் அறிமுகக்கூட்டம் தனியார் கலையரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் செல்வக்குமார் தலைமை வகித்தார்.
பா.ஜ., வால்பாறை மண்டல் தலைவர் செந்தில்முருகன், இளைஞரணி மண்டலத்தலைவர் சந்தனபிரசாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞரணி மண்டல செயலாளர் அருண்குமார் வரவேற்றார்.
கூட்டத்தில், பா.ஜ., கோவை தெற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகர், மாவட்ட துணைத்தலைவர் தங்கவேல், மாவட்ட செயலாளர் பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிர்வாகிகள் பேசும் போது, 'கட்சியின் கடின உழைப்பால் பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ., அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. இதே போல் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், கட்சியின் புதிய நிர்வாகிகள் சுறுசுறுப்புடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும்.
கூட்டணி கட்சியில் யார் வேட்பாளராக நின்றாலும், அவர்களை வெற்றி பெற செய்ய கட்சியின் நிர்வாகிகள் கடினமாக உழைக்க வேண்டும். பா.ஜ., அரசின் சாதனைகளை வீடு தோறும் நேரடியாக சென்று எடுத்துச்சொல்லி, ஓட்டுக்களை சேகரிக்க வேண்டும்,' என்றனர்.

