sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 ரிப்போர்ட்டர் லீக்ஸ்( பொள்ளாச்சி)

/

 ரிப்போர்ட்டர் லீக்ஸ்( பொள்ளாச்சி)

 ரிப்போர்ட்டர் லீக்ஸ்( பொள்ளாச்சி)

 ரிப்போர்ட்டர் லீக்ஸ்( பொள்ளாச்சி)


ADDED : நவ 17, 2025 01:03 AM

Google News

ADDED : நவ 17, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எஸ்.ஐ.ஆரால் பறிபோகும் பணம்அதிருப்தியில் சுற்றும் கட்சியினர் கிணத்துக்கடவில் உள்ள ஹோட்டலுக்கு சாப்பிட சென்றிருந்தேன். அங்கு சாப்பிட்டுக்கொண்டு இருந்த இருவர், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி பற்றி சுவாரஸ்யமா பேசிக்கிட்டாங்க. அவங்க உரையாடல கவனிச்சேன்.

முன்னாடி எல்லாம் எலக்சனுக்கு சில நாள் முன்னாடி, வாக்காளர் லிஸ்ட் படி, பூத்சிலிப் இருக்குதானு பார்த்து, செக் பண்ணி கட்சிக்காரங்க சொல்லுவாங்க. அதுக்கு ஏத்த மாதிரி கட்சியில இருந்து பணமும் வரும்.

அந்த லிஸ்ட்டுல, இறந்தவர்கள் பேரும், டபிள் என்ட்ரி இப்படி எல்லாத்தையும் கணக்குல சேர்த்து, பணத்தை வாங்கிட்டு இருந்தாங்க. இப்போ, எஸ்.ஐ.ஆர்., வந்ததால எல்லாமே மாறி போச்சு. டபுள் என்டரி, இறந்தவங்க என எல்லாமே நீக்கம் செஞ்சு லிஸ்ட் கரெக்டா வர்ரதால, இனி கட்சி தலைமையை ஏமாத்தவும் முடியாது, பணத்த ஆட்டைய போடவும் முடியாது.

இதனால, கட்சிக்காரங்க ஒரு சிலர் ரொம்ப அப்செட்டில் இருக்காங்க. இந்த நேரத்துல, ஓட்டர் லிஸ்டில் இருக்கும் பெயரை சரிபார்க்கும் பணிக்கும் போக சொல்லறதால கடுப்புல சுத்துறாங்க.

அரசியல் கட்சியில இனி, 'கரன்சி' இல்லாம எந்த வேலையும் நடக்காது. கட்சிக்காக விசுவாசமா வேலை பார்த்த காலமெல்லாம் மாறிடுச்சு. கட்சியும் கார்ப்பரேட் ஆயிருச்சு, கட்சிக்காரங்களும் கரப்ஷன் ஆயிட்டாங்கனு, ரெண்டு பேரும் பேசிக்கிட்டாங்க.

தற்காலிக துாய்மை பணியாளர்களஆட்டுவிக்கும் ஆளும்கட்சியினர் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ரவுண்டானாவில் 'வாக்கிங்' சென்றேன். அங்கு வந்த நண்பர், 'ஆளும்கட்சிக்காரங்க, துாய்மை பணியாளர்களையும் விட்டு வைக்கவில்லை' என, புது தகவலோடு அரட்டையை துவங்கினார். அவர், கூறியதில் இருந்து...

பொள்ளாச்சி நகராட்சியில இருக்கற, 36 வார்டிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்திட்டு இருக்காங்க. இதுக்காக, நிரந்தர மற்றும் ஒப்பந்தம் அடிப்படையில, 216க்கும் மேற்பட்ட துாய்மைப் பணியாளர்கள் பணியில இருக்காங்க.

அதுல, ஒப்பந்த துாய்மை பணியாளர்களே, 150க்கும் மேற்பட்டோர் இருக்காங்க. இவர்களுக்கு வீடுகள்தோறும் குப்பை சேகரிக்கற பணி ஒதுக்கியிருக்காங்க. ஆனா, சில ஆளும்கட்சி கவுன்சிலர்க, தங்களோட கட்சி முக்கிய தலைவர்கள் வரும் போது கூட்டம் சேர்க்க துாய்மைப் பணியாளர்கள கட்டாயப்படுத்தி அழைச்சிட்டு போறாங்க.

ஆளும்கட்சி கவுன்சிலருக சொல்லி போகலைனா, பணியில் இருந்து நீக்கிடுவாங்களோ என்ற பயத்துல துாய்மைப் பணியாளர்களும் மறுபேச்சு பேசாம, எந்த ஊராக இருந்தாலும் கட்சித் தலைவர்கள் கூட்டதுக்கு போக வேன் ஏறிடுறாங்க. துாய்மை பணியாளர்களையும் விட்டு வைக்காம இப்படி அட்ராசிட்டி பண்ணுறாங்க. இதனால, ஊருக்குள்ள குப்பை சேகரிக்கறது பாதிக்குனு, விபரத்தை சொன்னார்.

ஆக்கிரமிப்புகளால் மாயமாகுது ரோடுகண்டுக்காத அதிகாரிகளால வேதனை வால்பாறையில நிறைய பிரச்னை இருக்கு, ஆனா, அதிகாரிக கண்டுக்க மாட்டீங்கறாங்கனு, பஸ்சுக்காக காத்திருந்த இரு இளைஞர்கள் பேசிக்கொண்டனர். என்ன மேட்டர்னு கவனிச்சேன்.

வால்பாறைக்கு டூரிஸ்ட்டுகள் நிறைய வர்றாங்க. ஆனா, ரோட்டை ஆக்கிரமித்திருக்கற கடைகளால உள்ளூர்க்காரங்களும், டூரிஸ்ட்களும் ரோட்டுல நிம்மதியா நடக்க கூட முடியாம தடுமாறுறாங்க.

ஆக்கிரமிப்பு அகற்றுவதாக கூறி, போன வருஷம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிக சாலையோர வியாபாரிகளுக்கு கண்துடைப்புக்காக நோட்டீஸ் மட்டும் கொடுத்தாங்க. இதுவரைக்கும் எந்த ஆக்கிரமிப்பையும் அகற்றுல.

காமராஜ்நகர்ல இருந்து, ஸ்டேன்மோர் சந்திப்பு வரைக்கும் ரோட்டை ஆக்கிரமிச்சு கட்டடங்களும், கடைகளும் இருக்கு. இப்படியே போச்சுனா, ரோடே காணாம போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்ல.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிக ஆக்கிரமிப்பு அகற்ற வந்தா, மற்ற துறை அதிகாரிக ஒத்துழைக்க மாட்டீங்கறாங்களாம். ஆக்கிரமிப்புகளுக்கு பின்னாடி, ஆளும்கட்சியினர் பக்கபலமா இருக்கறாங்க. அதனால, நமக்கேன் வம்புனு அதிகாரிகளும் கப்சிப்னு இருக்காங்க. இதையே வாய்ப்பா பயன்படுத்திட்டு, அதிகாரிகளும் வாங்க வேண்டியத வாங்கிட்டு, ஆளும்கட்சியினருக்கு ஜால்ரா போட்டுட்டு காலத்த ஓட்டுறாங்கனு, ஆதங்கப்பட்டு பேசிக்கிட்டாங்க.

எல்லா நேரமும் எல்லாமும் கிடைக்குதுபோதை ஆசாமிகளால் நிம்மதி போச்சு உடுமலை அரசு கலைக்கல்லுாரி செல்லும் வழியில், மழைக்காக ராமசாமி நகரில் மரத்தடியில் ஒதுங்கினோம். அங்கே நின்றிருந்த பெரியவர்கள் தங்கள் ஏரியா பிரச்னை குறித்து வேதனையோடு பேசிக்கிட்டிருந்தாங்க. அவங்க உரையாடல் இதோ...

இந்த காலத்துல பசங்க போக்கே சரியில்ல. அதுக்கேத்த மாதிரி அரசாங்கமும், அதிகாரிகளும் நடக்கறதுதான் வேதனையாக இருக்கு. நம்ம ஏரியாவுல லீவு நாள்ல, ரோட்டை ஆக்கிரமிச்சு உக்காந்து சூதாட்டம் ஆடுறாங்க. பைக்கை தாறுமாறாக ஓட்டுறாங்க. இதுக்கெல்லாம் காரணம் மது போதை தான். சிட்டிக்குள்ள 24 மணி நேரமும், மதுபானம் விக்கறதால, எல்லாரும் போதையில சுத்துறாங்க.

இதுமட்டுமில்லாம, எல்லா போதை பொருளும் ஈஸியா கிடைக்குது. இளவயது பசங்க வழிதவறி போறாங்க. ஆன்லைன் லாட்டரி அப்படி இப்படின்னு இவங்களுக்கு பணமும் கிடைச்சுருது. சின்னதா ஒரு பிரச்னை நடந்ததும், மக்கள் போலீசுக்கு புகார் கொடுத்தா அவங்க எந்த நடவடிக்கையும் எடுக்கறதில்ல.

இதனால, லீவு நாள்ல ஒரு சில வீதிகள் வழியாக பெண்களும், குழந்தைகளும் போக முடியறது இல்லை. பெரிய பிரச்னை நடந்ததுக்கு அப்புறம், ஒட்டுமொத்த போலீசையும் கொண்டு வந்து விசாரணை நடத்துவாங்க. உரிய பாதுகாப்பு கிடைக்க நடவடிக்கை எடுங்கனு, எஸ்.பி., வரைக்கும் புகார் அனுப்பியிருக்கோம். என்ன நடக்கும்னு பொறுத்திருந்து பார்ப்போம் என்றபடி அங்கிருந்து நகர்ந்தனர்.

போண்டா, டீக்கு நிரம்பிய கூட்டம்அப்செட்டான ஆளும்கட்சி நிர்வாகி தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில், உடுமலை நகராட்சி ஆபீஸ் முன்பாக,தேர்தல் கமிஷன் சார்பில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினாங்க. செய்தி சேகரிக்க அங்கு போயிந்தோம்.

தலைவர்கள் மேடையிலும், தொண்டர்கள் கீழேயும் நின்றிருந்தாங்க. ஆர்ப்பாட்டத்துல பங்கேற்பவர்களுக்கு, ஆளும்கட்சி சார்பில், நகராட்சி ஆபீஸ் வளாகத்துல, டீ கடை அமைச்சு, சுடச்சுட போண்டா மற்றும் டீ வினியோகம் பண்ணினாங்க. ஆர்ப்பாட்டத்துக்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் டீ கடையில் முகாமிட்டு, போண்டா, டீயை ருசிபார்த்தாங்க. ஆர்ப்பாட்டம் நடக்கற இடத்தை காட்டிலும், டீக்கடையில கூட்டம் அள்ளியது.

மேடையில இருந்த ஆளும்கட்சி நிர்வாகிக அப்செட்டாகி, 'ஏப்பா... ஆர்ப்பாட்டம் நடத்தற இடத்துல கூட்டம் குறையும். டீக்கடையில, போண்டா, டீ கொடுக்கறத கொஞ்ச நேரத்துக்கு நிறுத்துங்கனு, மைக்குல அறிவிச்சாங்க. அதுக்கப்பறம் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்ட இடத்துக்கு வந்ததும் கோஷம் போட துவங்கினாங்க. இதனால, பிரதான ரோட்டுல போக்குவரத்தும் பாதித்தது.

சிறப்பு திருத்தம் சரிவர நடக்கல; வாக்காளர்களோட குழப்பம் தீரல!

பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே, நண்பர் ஒருவரை சந்தித்தேன். அவர், 'என்னப்பா இது வாக்காளர் பட்டியல் பற்றிய தகவல்களை யார்கிட்ட கேட்குறதுனு தெரியாம சிரமப்பட வேண்டிருக்கு,' என, பேச ஆரம்பித்தார். ஒருசில வார்டுல, ஒரே குடும்பத்த சேர்ந்தவங்களுக்கு படிவங்கள் சரிவர போய் சேரல.கடந்த, 2002 அல்லது 2005ம் ஆண்டு சட்டசபை தொகுதி எண், பாகம் எண் கேட்டால் என்ன செய்வது. எழுத, படிக்க தெரியாதவங்க இதையெல்லாம் எப்படி நிரப்புவாங்க. 20 வருஷத்துக்கு முன்னாடி தொகுதி மாறி வந்தவங்க கிட்ட பழைய தகவல் எதுவும் இல்லை. ஓட்டுச்சாவடி அலுவலர் கிட்டவும் அந்த தகவல் இல்லை. இதையெல்லாம் யாரு கிட்ட கேட்டு படிவத்தை நிரப்பறதுனு தெரியல. பொள்ளாச்சியில தேர்தல் பிரிவு அதிகாரிகள் என்ன செய்யறாங்கனு தெரியல. இரண்டு நாள் முகாம் நடத்த சொன்ன தகவலை கூட வெளியில சொல்லாம ரகசியமா வச்சுக்கிட்டாங்க. ஒரு சிலர் தகவல் தெரிந்து அவசர அவசரமா முகாமுக்கு போயிருக்காங்க. முகாம் நடத்துற தகவல் முன்கூட்டியே தெரிவிச்சிருந்தா மக்களுக்கு பயனுள்ளதா இருந்திருக்கும். தாசில்தார், சப் - கலெக்டர் என தேர்தல் அதிகாரிகள் இருந்தும், மக்களுக்கு எந்த தகவலையும் சொல்லறதில்ல. பொதுமக்கள் போனாலும் இவங்கள எளிதாக அணுக முடியுமானு தெரியல. இப்படியே போனா, வாக்காளர் பட்டியலை எல்லாரோட பேரும் இருக்குமானு சந்தேகம் கிளம்புது. இதையெல்லாம் கூட்டி, கழிச்சு பார்க்கும் போது, ஓட்டுச்சாவடி அலுவலர்களும், தேர்தல் பிரிவு அதிகாரிகளும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிய நுாறு சதவீதம் சரியா பண்ணுவாங்களானு தெரியல, என்றார்.








      Dinamalar
      Follow us