sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 விநாயக பெருமானுக்கு கவசம் அணிவிப்பு

/

 விநாயக பெருமானுக்கு கவசம் அணிவிப்பு

 விநாயக பெருமானுக்கு கவசம் அணிவிப்பு

 விநாயக பெருமானுக்கு கவசம் அணிவிப்பு


ADDED : ஜன 08, 2026 05:56 AM

Google News

ADDED : ஜன 08, 2026 05:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, கொண்டேகவுண்டன்பாளையம் கோவிலில், விநாயகருக்கு புதிய கவசம் அணிவிக்கப்பட்டது.

பொள்ளாச்சி அருகே, கொண்டேகவுண்டன்பாளையத்தில் சர்க்கரை விநாயகர் கோவில் உள்ளது. இங்குள்ள கிராம பெண்கள், விநாயகருக்கு கவசம் அணிவிக்க விருப்பம் தெரிவித்தனர்.

இதையடுத்து, கோவில் விழாக்குழுவினர் ஆலோசனை செய்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, பித்தளை, செம்பு கலந்த கவசம் அணிவிக்க முடிவு செய்தனர்.

இதற்காக கிராமத்தில் வசிக்கும் பெண்களே முன்னின்று, நன்கொடை வசூல் செய்து சர்க்கரை விநாயகருக்கும், பீடத்துக்கும் கவச உடை தயார் செய்தனர்.

சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயக பெருமானுக்கு, 16 வகையான அபிேஷகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, விநாயகருக்கு கவசம் அணிவிக்கப்பட்டது. இதில், பெண்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us