/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காமாட்சியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
/
காமாட்சியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
ADDED : மே 02, 2025 08:46 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, கோட்டூர் மலையாண்டிபட்டிணம் கனகரத்தின காமாட்சியம்மன், ஏகாம்பர ஈஸ்வரர் திருக்கல்யாணம் மற்றும் 67ம் ஆண்டு திருவிழா நிகழ்ச்சிகள், வரும் 9ம் தேதி துவங்குகிறது.
இதில், இரவு, 9:00 மணிக்கு, வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், கொடியேற்றும் நிகழ்வு நடக்கிறது. 10ம் தேதி, இரவு, 9:00 மணிக்கு, கும்பஸ்தாபனம் நடக்கிறது. 11ம் தேதி, காலை 10:00 மணிக்கு, மாவிளக்கு பூஜைகள் நடக்கிறது.
வரும், 12ம் தேதி, மதியம், 1:00 மணிக்கு, அம்மன் திருக்கல்யாணம் மற்றும் அன்னதானம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு, அம்மன் திருவீதி உலா நடக்கிறது. இரவு, 10:00 மணிக்கு, கும்பம் கங்கையில் சேர்த்தல் மற்றும் முளைப்பாலிகை கங்கையில் விடும் நிகழ்வு நடக்கிறது. 13ம் தேதி, மாலை 5:00 மணிக்கு, மகா அபிஷேகம் நடக்கிறது.