/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மன்னீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்; அன்னுாரில் இன்று தேரோட்டம்
/
மன்னீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்; அன்னுாரில் இன்று தேரோட்டம்
மன்னீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்; அன்னுாரில் இன்று தேரோட்டம்
மன்னீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்; அன்னுாரில் இன்று தேரோட்டம்
ADDED : ஜன 10, 2025 12:11 AM

அன்னுார்; அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இன்று தேரோட்டம் நடக்கிறது.
அன்னுார் மன்னீஸ்வரர் கோவில், 25ம் ஆண்டு தேர்த் திருவிழா கடந்த 3ம் தேதி கிராம தேவதை வழிபாடுடன் துவங்கியது. 4ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து தினமும் இரவு சுவாமி வெவ்வேறு வாகனங்களில் திரு வீதியுலா வந்து அருள் பாலித்தார்.
நேற்று முன்தினம் இரவு முருகர், விநாயகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் வீற்றிருக்கும் ஐந்து வாகனங்களில் திருவீதியுலா நடந்தது. இதில் செண்டை மேளம், கயிலை வாத்தியம் மற்றும் ஜமாப் இசைக்கப்பட்டது.
நேற்று காலை கோவிலில் திருவாசகம் வாசிக்கப்பட்டது. காலை 11:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், அறங்காவலர்கள், கட்டளைதாரர்கள் மற்றும் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலை 8:00 மணிக்கு மன்னீஸ்வரர், அருந்தவ செல்வியுடன் தேருக்கு எழுந்தருளுகிறார். காலை 10:00 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வடம் பிடித்து தேர் இழுக்கின்றனர்.
இரவு 7:00 மணிக்கு பவளக்கொடி வள்ளி கும்மியாட்டம் நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.