/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
/
மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED : ஏப் 29, 2025 09:15 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, காளியண்ணன்புதுார் மீனாட்சி அம்மன் கோவிலில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.
பொள்ளாச்சி அருகே, கோவில்பாளையம் காளியண்ணன்புதுார் மீனாட்சி அம்மன் உடனமர் சுந்தரேஸ்வரர் கோவிலில், சித்திரை திருவிழா கடந்த, 27ம் தேதி மாலை, 6:30 மணிக்கு மேல், 7:30 மணிக்குள் வாஸ்து சாந்தி, இரவு, 11:00 மணிக்கு கிராம சாந்தி பூஜையுடன் துவங்கியது.
தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு அழைத்தல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதில், மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரருடன் திருக்கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.
மதியம், 2:30 மணிக்கு பூவோடு எடுத்தல், இரவு, 7:00 மணிக்கு சக்தி கலசம் கங்கையில் சேர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றன.
இன்று காலை, 5:00 மணிக்கு மதுரைவீரன் சுவாமிக்கு அபிேஷக ஆராதனை, நாளை (1ம் தேதி) காலை, 7:30 மணிக்கு மஞ்சள் நீராட்டு, சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும், 2ம் தேதி காலை, 6:30 மணிக்கு மஹா அபிேஷகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது.