ADDED : மார் 12, 2026 04:45 AM

அ நிறம் | அளவு
சோமனுார்: சோமனுார் அடுத்த ராமாச்சியம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில், திருக்கல்யாண உற்சவ விழா, பிப்., 24ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த, 3ம் தேதி இரவு கம்பம் நடப்பட்டது. 4ம் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பக்தர்கள் பூவோடு எடுத்தல், 9ம் தேதி விநாயகர் மற்றும் கருப்பராயனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது.
நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் பொங்கல் வைத்தும், மடிப்பிச்சை எடுத்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
