/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
களை கட்டியது கலைத்திருவிழா போட்டிகள்
/
களை கட்டியது கலைத்திருவிழா போட்டிகள்
ADDED : ஆக 25, 2025 09:36 PM

மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம் காரமடை கல்வி வட்டாரத்தில் உள்ள காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகையில் உள்ள 124 அரசு மற்றும் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டிகள் நேற்று துவங்கியது. வரும் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு 'பசுமையும் பாரம்பரியம்' என்ற மையக்கருத்தின் அடிப்படையில் போட்டிகள் நடைபெறுகிறது. அதன்படி 1 முதல் 2ம் வகுப்புகளுக்கு ஒப்புவித்தல் போட்டி, கதை சொல்லுதல், வண்ணம் தீட்டுதல், மாறுவேட போட்டி, களிமண் பொம்மை செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் நடைபெறுகிறது.
3, 4, மற்றும் 5ம் வகுப்புகளுக்கு பேச்சு போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், மெல்லிசை பாடல், தேச பக்தி பாடல்கள், நாட்டுப்புற நடனம் தனி மற்றும் குழு பரதநாட்டியம் உள்ளிட்ட பிரிவுகளில் நடைபெறுகிறது.