/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீலாம்பூர் கதிர் கல்லுாரியில் களைகட்டிய ஆண்டு விழா
/
நீலாம்பூர் கதிர் கல்லுாரியில் களைகட்டிய ஆண்டு விழா
நீலாம்பூர் கதிர் கல்லுாரியில் களைகட்டிய ஆண்டு விழா
நீலாம்பூர் கதிர் கல்லுாரியில் களைகட்டிய ஆண்டு விழா
ADDED : மே 08, 2025 12:57 AM

கோவை; நீலாம்பூர் கதிர் பொறியியல் கல்லுாரி ஆண்டு விழா, 'தருணா 25' என்ற தலைப்பில் கல்லுாரி வளாகத்தில் நடந்தது. கதிர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கதிர் தலைமை வகித்தார்.
அவர் பேசுகையில், ''கல்லுாரியின் தரம் உயர்த்தப்பட்டு, தன்னாட்சி அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. மாணவர்கள், கல்வித்திறன் மட்டுமின்றி, தொழில் திறனையும் பெற பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன,'' என்றார்.
கல்லுாரியின் செயல்பாடுகள், சாதனைகள் குறித்து ஆண்டறிக்கையில், கல்லுாரி முதல்வர் உதயகுமார் எடுத்துரைத்தார். ஆடல், பாடல் என பல்வேறு கலை நிகழ்வுகளை மாணவர்கள் அரங்கேற்றினர். தொடர்ந்து, விளையாட்டு, கலை, கலாச்சாரம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, கவுரவிக்கப்பட்டது. கல்லுாரி செயலாளர் லாவண்யா, உள்கட்டமைப்பு தர நிர்ணய பிரிவு தலைவர் ஜெகதீஷ்குமார் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.