தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தேயிலை எஸ்டேட்களில் கவாத்து பணிகள் தீவிரம்

தேயிலை எஸ்டேட்களில் கவாத்து பணிகள் தீவிரம்

தேயிலை எஸ்டேட்களில் கவாத்து பணிகள் தீவிரம்


ADDED : ஜூலை 07, 2025 10:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2025 10:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வால்பாறை; வால்பாறையில், தென்மேற்கு பருவமழை பெய்யும் நிலையில், தேயிலை செடிகளுக்கு கவாத்து பணி தீவிரமாக நடக்கிறது.

வால்பாறை மலைப்பகுதியில், பல்வேறு எஸ்டேட்களில் மொத்தம், 32,825 ஏக்கரில் தேயிலை, காபி, ஏலம், மிளகு போன்றவை பயிரிடப்பட்டுள்ளன. இதில், தேயிலை மட்டும், 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலை துாள், கோவை, குன்னுார்,கொச்சி போன்ற ஏலமையத்திற்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

வால்பாறையில் கடந்த, மே மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை துவங்கி தொடர்ந்து பெய்கிறது. இந்நிலையில், பல்வேறு எஸ்டேட் பகுதியில் தேயிலை செடிகளில் கவாத்து பணி தீவிரமாக நடக்கிறது.

தோட்ட அதிகாரிகள் கூறுகையில், 'தேயிலைக்கு புத்துணர்ச்சியூட்டும் வகையில், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேயிலை செடிகளில் கவாத்து செய்யப்படுகிறது. தற்போது, பருவமழை தொடர்ந்து பெய்வதால், பெரும்பாலான எஸ்டேட்களில் கவாத்து பணி நடக்கிறது. கவாத்து முடிந்து, 90 நாட்களுக்கு பின் தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விடுவதோடு, உற்பத்தியும் அதிகரிக்கும்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us