/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விற்பனை கூடத்தில் வாரந்தோறும் பருத்தி ஏலம்
/
விற்பனை கூடத்தில் வாரந்தோறும் பருத்தி ஏலம்
ADDED : டிச 26, 2024 10:19 PM
உடுமலை, ; 'மூலனுார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், வாரந்தோறும் பருத்தி ஏலம் நடைபெறுகிறது; விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம்,' என, திருப்பூர் மாவட்ட விற்பனை குழுவினர் தெரிவித்துள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்கும், மானாவாரியாகவும் பரவலாக பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இச்சாகுபடியில், போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
நடப்பு சீசனில்,அறுவடை துவங்கியுள்ள நிலையில், 'பருத்திக்கு நிலையான விலை கிடைக்க அரசு உதவ வேண்டும்; விலை விபரங்கள் குறித்த தகவல்களை ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் வாயிலாக வெளியிட வேண்டும்,' என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில், டிச., 24ல், செய்தி வெளியானது. இதையடுத்து, திருப்பூர் மாவட்ட விற்பனை குழு சார்பில், மூலனுார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் பருத்தி ஏலம் நடத்தப்பட்ட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
'இ-நாம்' திட்டத்தின் கீழ், ஏலம் நடைபெறுவதால், விவசாயிகள் நேரடியாக பருத்தியை விற்பனை செய்து பயன்பெறலாம், என, மாவட்ட விற்பனை குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

