/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெளுத்து வாங்க போகுது வெயில் காலநிலை ஆய்வு மையம் கணிப்பு
/
வெளுத்து வாங்க போகுது வெயில் காலநிலை ஆய்வு மையம் கணிப்பு
வெளுத்து வாங்க போகுது வெயில் காலநிலை ஆய்வு மையம் கணிப்பு
வெளுத்து வாங்க போகுது வெயில் காலநிலை ஆய்வு மையம் கணிப்பு
ADDED : பிப் 24, 2024 12:37 AM
கோவை;கோவையில் ஏற்கனவே வெயில் அதிகமாக உள்ள நிலையில், வரும் ஐந்து நாட்கள் வெயில் மேலும் அதிகரிக்கும் என, வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.
கடந்த வாரம் அதிகபட்ச வெப்பநிலை, 34-35 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-24 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருந்தது.
இந்த வாரம், அதிகபட்சம் 36-37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்சம் 24-25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். காலை நேர ஈரப்பதம் 90 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம் 30 சதவீதமும், பதிவாக வாய்ப்புள்ளது.
காற்றின் வேகம் 8-12 கி.மீ., வேகத்தில், தென் கிழக்கு திசையிலிருந்து வீசும். கோவையில் பகல், இரவு நேர வெப்பநிலை உயர்ந்து வருவதால், மண் ஈரத்தை பொருத்து இறவை பயிர்களுக்கு நீர்பாசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமியிடம் கேட்டபோது, ''கோவைக்கு வழக்கமாகவே பிப்., பாதியில் கோடை வெப்பம் துவங்கிவிடும். பிப்., மார்ச் மாதம் வெப்பம் அதிகரித்து, ஏப்., மே மாதங்களில் கோடை மழை பெய்யும். இதனால், அக்னி நட்சத்திர வெயில் பெரிதாக தெரியாது.
கடந்த வாரத்தை காட்டிலும், இப்போது வெயில் சற்று அதிகமாக உள்ளது. ஓரிரு நாட்களில் சிறிது வெப்பம் குறையும். விவசாயிகள் வேளாண் பல்கலை ஆலோசனைபடி விதைப்பு, அறுவடை முடிவுகளை மேற்கொள்ளலாம்,'' என்றார்.