/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய மாணவர்களுக்கு வரவேற்பு விழா
/
புதிய மாணவர்களுக்கு வரவேற்பு விழா
ADDED : ஜூலை 21, 2025 10:50 PM

கோவை; கோவை, நேரு ஏரோனாடிக்ஸ் மற்றும் அப்ளைடு சயின்ஸ் கல்லூரியில், விமானப் பராமரிப்பு பொறியியல் துறைக்கான புதிய மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடந்தது. நேரு கல்வி குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார்.
மூத்த விமானப் பொறியாளர் உன்னிகிருஷ்ணன், ஐதராபாத்தின் ஜி.எம்.ஆர்., ஏரோ டெக்னிக் நிறுவனத்தில் விமானப் பராமரிப்பு நிபுணராகப் பணியாற்றும், கல்லுாரியின் முன்னாள் மாணவர் தினேஷ் ராம் ஆகியோர் சிறப்பு விருந்தினகளாக பங்கேற்றனர்.
அவர்கள் பேசுகையில், 'விமானப் பராமரிப்பு துறையில், துல்லியம் மற்றும் பாதுகாப்பு மிகவும் முக்கியமானவை. விமானம் பாதுகாப்பாக பறக்க, ஒவ்வொரு பாகமும் துல்லியமாக பராமரிக்கப்பட வேண்டும்' என்றார்.
கல்லுாரியின் கல்வி மற்றும் நிர்வாக இயக்குனர் நாகராஜா, கல்வி விவகாரங்களுக்கான டீன் பாலாஜி, பயிற்சி மேலாளர் ரமேஷ் பாபு ஆகியோர் பங்கேற்றனர்.

