/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
/
கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
ADDED : ஜூலை 06, 2025 11:56 PM

கோவை; மலுமிச்சம்பட்டி, ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடந்தது. கல்லுாரியின் தலைவர் மஹாவீர் போத்ரா தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, ரோட்டரி கிளப் சர்வதேச மாவட்டம் 3200 கவர்னர் சூரியச்சன், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் சிறப்புரையாற்றினார். வராண்டா வர்சிட்டி பொதுமேலாளர் பிரேம் சந்த் ஜமாத், மாணவர்களுக்கு போட்டி தேர்வுகள் குறித்து எடுத்துரைத்தார்.
கல்லுாரியின் முதல்வர் சுப்பிரமணி பெற்றோர் இல்லாதோர், பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்தவர் என 36 மாணவர்களுக்கு, மூன்று வருட இலவச கல்வியை கல்லுாரி நிர்வாகம் வழங்குவதாக தெரிவித்தார். தொடர்ந்து, முதலாமாண்டு மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
கல்லுாரி செயலாளர் சுனில்குமார் நஹாடா, துணைச் செயலாளர் பரத்குமார் ஜெகமணி, ஸ்ரீ நேரு வித்யாலயா பள்ளியின் செயலாளர் கோபால் புராடியா, துணைச் செயலாளர் பாப்னா, கோவை நலச் சங்க உறுப்பினர் ஷீதல் மேத்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.