/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
/
கல்லுாரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
ADDED : செப் 09, 2025 10:45 PM

நேரு தொழில்நுட்பக் கல்லுாரி * நேரு தொழில்நுட்பக் கல்லுாரியில், முதலாம் ஆண்டு பி.இ., மற்றும் பி.டெக்., வகுப்புகளின் தொடக்க விழா நடந்தது. நேரு கல்விக் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, எழுத்தாளர் ராமகிருஷ்ணன், ''நேரத்தை சரியாக பயன்படுத்தினால் எந்த இலக்கிலும் வெற்றியும், வாழ்வில் முன்னேற்றமும் அடையலாம்,'' என்றார்.
அப்வியூஎக்ஸ் நிறுவனத்தின் திறமை மற்றும் கலாசாரம் உதவி மேலாளர் பிரியதர்ஷினி, ''புதியவற்றை கற்றுக்கொள்ளும் தாகத்தை மாணவர்கள் வளர்த்துக்கொண்டால் எந்த துறையிலும் நிலைத்திருக்கலாம்,'' என்றார்.
இரண்டாம் ஆண்டு மாணவர்கள் புதிய மாணவர்களை மலர்களால் வரவேற்று, வாழ்த்துக்களை தெரிவித்தனர். நேரு கல்விக் குழுமத்தின் செயல் இயக்குனர் நாகராஜா, முதல்வர் சிவராஜா, பேராசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.
எஸ்.என்.எஸ். கல்லுாரி விழா * எஸ்.என்.எஸ்., பொறியியல் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா உற்சாகமாக நடந்தது. எஸ்.என்.எஸ்., கல்வி குழுமங்களின் தலைவர் ராஜலட்சுமி, தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல் குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இ.ஒய்.கோவை மையத் தலைவர் பிரகதீசன், பிரசிடியோ நிறுவனத்தின் சி.இ.ஓ.ராம்குமார் மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளர் ஜகன் ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, தலைமைத் திறன்கள், ஏ.ஐ.தொழில்நுட்பம் உட்பட பல்வேறு தலைப்புகளில், மாணவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கினார். கல்லுாரி முதல்வர், துணை முதல்வர்கள், டீன்கள், பேராசிரியர்கள் மற்றும் 1,800 மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.
ஜே.சி.டி. பொறியியல் கல்லுாரி * பிச்சனுார் ஜே.சி.டி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், 2025--26ம் கல்வி ஆண்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
ஏ.பி.பி. குளோபல் இண்டஸ்ட்ரீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழு முதன்மை விஞ்ஞானி ஹரிராம் சதீஷ், மேலாளர் அங்கிதா மெஹ்ரா, பேச்சாளர் முத்துக்குமார் ஆகியோர் உரையாற்றினர். அவர்கள், 'உழைப்பவர்களுக்கு உலகமே துணையாக இருக்கும். கடின உழைப்பும், விடாமுயற்சி, நேர மேலாண்மை வெற்றியைத் தேடித் தரும்' என்றனர்.
ஜே.சி.டி நிறுவனங்களின் செயலாளர், அறங்காவலர் துர்கா, முதல்வர் மனோகரன், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.