ஆர்டர் செய்தால் வீடு தேடி வரும் பலகாரங்கள்! ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் திட்டத்துக்கு வரவேற்பு
ஆர்டர் செய்தால் வீடு தேடி வரும் பலகாரங்கள்! ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் திட்டத்துக்கு வரவேற்பு
UPDATED : அக் 30, 2026 08:51 PM
ADDED : அக் 30, 2026 08:48 PM

தீபாவளி ஷாப்பிங் நெரிசலுக்கு நடுவில், போக்குவரத்து தடங்கல்களை தாண்டி, வரிசையில் நின்று பலகாரங்கள் வாங்குவது எப்படி?
இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் இந்த தீபாவளிக்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
போன் செய்து உங்கள் தேவை என்ன என்பதை சொன்னால் போதும், பலகாரங்கள் உங்கள் வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும்.
”ஆர்டர் செய்த அன்றே உங்கள் வீடு தேடி டெலிவரி!” என்ற விளம்பரம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது ஒரே நாளில் பல ஆயிரம் பேர் ஆர்டர் செய்தால், அனைவருக்கும் வீடு தேடி டெலிவரி செய்வது சாத்தியமா? சுடச்சுட, சுவையான போன்ற வார்த்தைகளுடன் சேர்த்தே பயன்படுத்தும் பலகாரங்களை மிகப்பெரிய அளவில் தயாரிக்க எவ்வளவு ஆட்கள் தேவை? போன்ற கேள்விகள் எழுந்தன.
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஓனரையே கேட்டு விடுவோம் என்று அணுகினோம். நிறுவனத்தின் இயக்குநர் வைஷ்ணவி கிருஷ்ணன் நம் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்:
மிகப்பெரிய அளவில் பலகாரங்கள் தயாரிப்பது எங்களுக்கு புது விஷயம் கிடையாது. இத்தனை ஆண்டுகளாக செய்து வரும் வேலைகளை, தீபாவளிக்காக கொஞ்சம் டியூன் செய்துள்ளோம், அவ்வளவுதான்.
தேவையான பொருட்கள், ஆட்கள், சாதனங்கள், வசதிகள் எப்போதும் எங்களிடம் உண்டு. எனவே தேவைக்கு ஏற்ற மாதிரி தயாரிப்பதில் சிரமங்கள் ஏற்படாது. நகரம் வளர்ச்சி அடைவதாலும், கட்டுமானங்கள் அதிகரிப்பாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த சிக்கல்களை தாண்டி நேரடியாக கடைக்கு சென்று ஷாப்பிங் செய்ய மக்கள் சிரமப்படுகின்றனர். டோர் டெலிவரி பரவலாகி விட்டதால், தேவையான பொருட்கள் வீடு தேடி வருவதையே விரும்புகின்றனர். அதனால் இந்த அறிவிப்பை வெளியிட்டோம்.
கடைசி நேரப் பரபரப்பை தவிர்த்து, தேவையான பலகாரங்களை திட்டமிட்டு வாங்க முடியும்; யார் யாருக்கு என்ன கொடுக்கலாம் என்பதை தீர்மானிக்க முடியும். ஆகவே, கோவை மக்களிடம் எங்கள் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அன்றே டெலிவரி என்பது, ஒரு நாளைக்குள் டெலிவரி என்ற வேகத்தை குறிக்கும். 24 மணி நேரத்துக்குள் டெலிவரி செய்வதற்கான எல்லா வசதிகளும் எங்களுக்கு உண்டு.
நாங்களே தயாரித்து விற்பதால், ஆர்டர்கள் மூலம் மக்களின் தேவையை அறிந்து அதற்கேற்ப பலகாரங்களை தயாரிக்க முடியும். எங்களுக்கு 18 கிளைகள் உள்ளன. ஒவ்வொரு கிளையிலும் தேவைக்கேற்ப இருப்பு கண்காணிக்கப்பட்டு, தினமும் பொருட்கள் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு 6 வகையான காம்போ தொகுப்புகளை அறிமுகம் செய்துள்ளோம்.
இனிப்பு, காரம் கலந்த காம்போ, இனிப்புகள் மட்டும் அடங்கிய காம்போ, மைசூர்பாக் பெட்டி, குழந்தைகள் விரும்பும் ஃபியூஷன் ஸ்வீட்ஸ், முந்திரி கத்லி, நெய் முந்திரி, கார மைசூர்பா, லட்டு, ரோல்ஸ், ஸ்கொயர் வகைகள் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் உள்ளன. மேலும், 51 வகையான இனிப்புகள் அடங்கிய 'மதூர் 51' தொகுப்பும் உள்ளது.
இன்று ஆர்டர் கொடுத்தால் இன்றே பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது இல்லை. வேறு தேதியில் டெலிவரி கேட்டாலும் அதன்படி வழங்க முடியும். கோவையில் உள்ளவர்கள்
தொலைபேசி எண். 9715151515 buykrishnasweets.com இணையதளம் மூலமாகவும், கோவைுக்கு வெளியே வசிப்பவர்கள் krishnasweets.com என்ற இணையதளம் வாயிலாகவும் ஆர்டர் செய்யலாம். டிஜிட்டல் வழியை விரும்பாதவர்கள் 97 15 15 15 15 என்ற ஈசியான போன் நம்பரில் ஆர்டர் செய்யலாம்.
