/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமகிருஷ்ணா கல்லுாரியில் மாணவர்களுக்கு வரவேற்பு
/
ராமகிருஷ்ணா கல்லுாரியில் மாணவர்களுக்கு வரவேற்பு
ADDED : ஆக 21, 2025 09:37 PM

கோவை; ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு மற்றும் புத்தாக்க பயிற்சி நிகழ்வு, கல்லுாரி வளாகத்தில் நடந்தது. எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார்.
இதில், ஸ்ட்ராடின்பினிட்டி கார்ப்பரேஷன் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பாலா, திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் வாய்ப்புகள், வேலைவாய்ப்புக்கான திறன் குறித்து விளக்கினார். மேலும், பல்வேறு பிரிவுகளின் கீழ் அரசு அளிக்கும் நிதியுதவி, திட்டங்கள் குறித்து அறிந்துகொள்ள அறிவுறுத்தினார்.
நிகழ்வின் ஒரு பகுதியாக, எல் அண்டு டி டெக்னாலஜி நிறுவனம் நடத்திய ஹேக்கத்தான் போட்டியில் முதல் பரிசு வென்ற மாணவர்களுக்கும், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ்குமார், கல்லுாரி முதல்வர் சவுந்தர்ராஜன், பேராசிரியர்கள் சக்திவேல், விசித்ரா, சிவாஜி, முன்னாள் மாணவர் ஷெய்ன்ராஜ் சுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.