/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரத்தினம் கல்வி குழுமத்தில் மாணவர்களுக்கு வரவேற்பு
/
ரத்தினம் கல்வி குழுமத்தில் மாணவர்களுக்கு வரவேற்பு
ADDED : செப் 15, 2025 09:54 PM

கோவை; ரத்தினம் கல்விக் குழுமங்களில், முதுகலை முதலாமாண்டு மாணவர்களுக்கான துவக்க விழா, 'அனுக்ரகா' எனும் பெயரில் நடந்தது. ரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் செந்தில் தலைமைவகித்தார்.
ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத் துறையின் உயர் அலுவலர் ஜீவிதா, ''வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொண்டு, தங்களின் வாழ்வில் ஒரு சிறந்த தொழில் முனைவோராக வர வேண்டும்,'' என்றார்.
தன்னம்பிக்கைப் பேச்சாளர் ஈரோடு மகேஷ், ''பட்டை தீட்டத் தீட்டத்தான் வைரம் பொலிவு பெறும். அதுபோல, கற்க கற்கத்தான் அறிவு பெருகும். வாய்ப்புகள் வரும்போது, அதை சரியாகப் பயன்படுத்தி முன்னேற வேண்டும்,'' என்றார்.
ரத்தினம் கல்விக் குழுமங்களின் செயல் அதிகாரி மாணிக்கம், தலைமை வணிக அதிகாரி நாகராஜ், ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தின் முதல்வர் கீதா மற்றும் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.