/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விழிப்புணர்வு குழுவுக்கு வரவேற்பு
/
விழிப்புணர்வு குழுவுக்கு வரவேற்பு
ADDED : ஆக 13, 2025 07:36 PM
பொள்ளாச்சி:
உடல் நலம் சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான சைக்கிள் யாத்திரை குழுவினர், பாலக்காட்டில் இருந்து கொழிஞ்சாம்பாறை வழியாக பொள்ளாச்சி வந்தனர். அவர்களை பொள்ளாச்சி சேவாலயம் அறக்கட்டளை, பொள்ளாச்சி நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை, பொள்ளாச்சி அபெக்ஸ் கிளப் சார்பில், பாலக்காடு ரோடு என்.ஜி.எம். கல்லுாரி அருகே வரவேற்பு அளிக்கப்பட்டது.
தலைவர் வக்கீல் மயில்சாமி தலைமையில், செயலாளர் ஞானசேகரன் வரவேற்றார். என்.ஜி.எம்., கல்லுாரி முதன்மையர் முத்துக்குமரன் பேசினார்.
சைக்கிள் யாத்திரை நினைவாக, தெப்பக்குளத்தில் இரண்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. பொள்ளாச்சி நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் துணைச் செயலாளர் சாந்தலட்சுமி, செயலாளர் வெங்கட்ரமணரவி வரவேற்றனர். ராமஜெயம் அறக்கட்டளை நிறுவனர் சுகுமார், இனிப்புகள் வழங்கினார்.