/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பண்ணாரி அம்மன் கல்லுாரி மாணவர்களுக்கு வரவேற்பு
/
பண்ணாரி அம்மன் கல்லுாரி மாணவர்களுக்கு வரவேற்பு
ADDED : ஆக 21, 2025 09:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்வு நேற்று கல்லுாரி வளாகத்தில் நடந்தது. கல்லுாரி தலைவர் ஸ்ரீ பாலசுப்பிரமணியம் பங்கேற்று, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
சங்கரா கண் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ரமணி, கல்வியை தொழில் வளர்ச்சிக்கான நுழைவாயிலாக மட்டுமின்றி, சமூக சேவைக்கான வழிகாட்டியாகவும் கருத வேண்டும் என்றும், மேலும், போட்டிகள் நிறைந்த உலகில் ஒழுக்கம், விடாமுயற்சி, திறன் மேம்பாடு அவசியம் குறித்தும் விளக்கம் அளித்தார்.
கல்லுாரி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றனர்.