/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விசுவாவசுவை வரவேற்போம்; கோவில்களில் சிறப்பு வழிபாடு
/
விசுவாவசுவை வரவேற்போம்; கோவில்களில் சிறப்பு வழிபாடு
விசுவாவசுவை வரவேற்போம்; கோவில்களில் சிறப்பு வழிபாடு
விசுவாவசுவை வரவேற்போம்; கோவில்களில் சிறப்பு வழிபாடு
ADDED : ஏப் 14, 2025 07:02 AM
கோவை : சித்திரை மாதப் பிறப்பான இன்று, குரோதி ஆண்டு முடிந்து, விசுவாவசு என்ற தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது.
இதையொட்டி, கோவையிலுள்ள கோவில்களில் கோலாகலமாக சிறப்பு வழிபாடு நடக்கிறது. பாரம்பரிய முறைப்படி வீடுகளில், சித்திரை கனி கண்டு கொண்டாட்டத்துடன், மக்கள் புத்தாண்டை உற்சாகமாக இன்று கொண்டாடுகின்றனர். சித்திரை புத்தாண்டை வரவேற்கும் வகையில், இன்று புலியகுளம் விநாயகர் கோவிலில், முந்திவிநாயகருக்கு பல வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது அதிகாலை 4:00 மணிக்கு கணபதிஹோமம் நடக்கிறது. கோனியம்மன், தண்டுமாரியம்மன் கோவிலில் அதிகாலை சுவாமிக்கு, சகலதிரவிய அபிஷேகம் நடக்கிறது. சிறப்பு மலர் அலங்காரமும், சிறப்பு வழிபாடுகளும் நடக்கிறது.
திரளான பக்தர்கள் வருகைக்காக சிறப்பு ஏற்பாடுகள் நடக்கிறது.வீடுகளில் தாம்பாளத் தட்டில், மா, பலா, வாழை மற்றும் பிற பழங்களோடு, எலுமிச்சம் பழம், வெற்றிலை, பாக்கு, பூக்கள், மஞ்சள், குங்குமம், ஆபரணங்கள், ரூபாய் நோட்டுக்கள், முகம் பார்க்கும் கண்ணாடி ஆகியவற்றை, கடவுள் படத்தின் முன் வைத்து, வழிபடுகின்றனர்.