/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளில் நலத்திட்ட உதவி
/
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளில் நலத்திட்ட உதவி
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளில் நலத்திட்ட உதவி
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளில் நலத்திட்ட உதவி
ADDED : ஜூன் 04, 2025 12:35 AM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி வடக்கு நகர தி.மு.க., சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 102வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவரின் படத்துக்கு மலர்துாவி மரியாதை செலுத்தப்பட்டது. வடக்கு நகர பொறுப்பாளர் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் சியாமளா முன்னிலை வகித்தார். சட்ட திட்டக்குழு உறுப்பினர் செல்வராஜ், மாநில ஐ.டி., விங்க் துணை செயலாளர் மகேந்திரன், மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் தமிழ்மணி பங்கேற்றனர்.
தெற்கு நகர தி.மு.க., சார்பில் நடந்த விழாவில், அவரது படத்துக்கு மலர் துாவி மரியாதை செய்தனர். தெற்கு நகர பொறுப்பாளர் அமுதபாரதி தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் மற்றும் நகராட்சி துணை தலைவர் கவுதமன் ஆகியோர் பங்கேற்றனர். கவுன்சிலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
ஜமீன் ஊத்துக்குளியில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 40 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு நோட், புக், பேனா, பென்சில் வழங்கப்பட்டது. பேரூராட்சி தலைவர் அகத்துார் சாமி தலைமை வகித்தார். துணை தலைவர் சையது அபுதாஹிர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வால்பாறை
வால்பாறையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா, காடம்பாறையில் கொண்டாடப்பட்டது. தி.மு.க., நகர செயலாளர் சுதாகர் தலைமை வகித்தார். கோவை தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன், கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
விழாவில் வால்பாறை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, துணைத்தலைவர் செந்தில்குமார், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பாஸ்கர், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வால்பாறை காந்திசிலை வளாகத்தில் நடந்த விழாவில் நகர செயலாளர் தலைமையில், கேக் வெட்டினர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நகராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய, நகர, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.