ADDED : பிப் 24, 2026 06:12 AM

அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மக்களுக்கு, அ.தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ. ஜெயராமன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பொள்ளாச்சி தொகுதிக்கு உட்பட்ட, நகர் பகுதி, வடுகபாளையம், நேதாஜி ரோடு உள்ளிட்ட பகுதிகளில், முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பழனிசாமி ஆகியோரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அ.தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
இந்நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ. ஜெயராமன் பங்கேற்று, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இதில், நகரச்செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். கட்சி நிர்வாகிகள் காளிமுத்து, அருணாச்சலம், கனகு, ராஜ்கபூர் பங்கேற்றனர்.
