sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஜமாபந்தியில் 59 பேருக்கு நலத்திட்ட உதவி; 630 மனுக்கள் மீது நடவடிக்கை

/

ஜமாபந்தியில் 59 பேருக்கு நலத்திட்ட உதவி; 630 மனுக்கள் மீது நடவடிக்கை

ஜமாபந்தியில் 59 பேருக்கு நலத்திட்ட உதவி; 630 மனுக்கள் மீது நடவடிக்கை

ஜமாபந்தியில் 59 பேருக்கு நலத்திட்ட உதவி; 630 மனுக்கள் மீது நடவடிக்கை


ADDED : மே 27, 2025 07:56 PM

Google News

ADDED : மே 27, 2025 07:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி தாலுகாவில் நடந்த ஜமாபந்தியில், மொத்தம், 630 மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில்,வருவாய் கிராமங்களுக்கு, நடப்பு ஆண்டுக்கான ஜமாபந்தி நடைபெற்றது. ராமபட்டிணம், பொள்ளாச்சி வடக்கு மற்றும் பொள்ளாச்சிதெற்கு, பெரிய நெகமம் ஆகிய உள்வட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி நடத்தி முடிக்கப்பட்டது.

இறுதி நாளான நேற்று, கோலார்பட்டி உள்வட்ட கிராமங்களுக்கு ஜமாபந்தி நடத்தப்பட்டது. கலெக்டர் பவன்குமார் தலைமை வகித்து, மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று கொண்டார்.

தொடர்ந்து, 59 பயனாளிகளுக்கு 65.75 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும் கலெக்டர் உத்தரவிட்டார்.

சப்-கலெக்டர் (பொறுப்பு) விஸ்வநாதன், நில அளவைகள் மற்றும் பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் சரவணன், தாசில்தார் வாசுதேவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வருவாய்த்துறையினர் கூறியதாவது:

நேற்று நடந்த ஜமாபந்தியில், சோளபாளையம், நாட்டுக்கல்பாளையம், நல்லாம்பள்ளி, சீலக்காம்பட்டி, கோமங்கலம், கோமங்கலம்புதுார், எஸ்.மலையாண்டிபட்டணம். கோலார்பட்டி, கஞ்சம்பட்டி, கூளநாயக்கன்பட்டி மற்றும் சிஞ்சுவாடி கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

மொத்தம், 57 பயனாளிகளுக்கு இ - -பட்டா, 2 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாறுதல் வழங்கப்பட்டது. இதுவரை நடந்த ஜமாபந்தியில், பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, ரேஷன் கார்டு, நத்தம் பட்டா மாற்றம், இலவச வீட்டுமனைப் பட்டா, நில அளவை, வேலைவாய்ப்பு, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. ஜமாபந்தியில் மொத்தம், 630 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு, கூறினர்.

உடுமலை


உடுமலை தாலுகா அலுவலகத்தில், திருப்பூர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் புஷ்பாதேவி தலைமையில் ஜமாபந்தி நடக்கிறது.

நேற்று, குடிமங்கலம் உள்வட்டத்திற்கு உட்பட்ட, பூளவாடி, ஆத்துக்கிணத்துப்பட்டி, கொண்டம்பட்டி, பெரியபட்டி, குப்பம்பாளையம், ஆமந்தகடவு, வடுகபாளையம், குடிமங்கலம், கோட்டமங்கலம், பொன்னேரி, புக்குளம் ஆகிய கிராமங்களுக்கு நடந்தது.

இதில், வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவி தொகை கோரி என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 68 மனுக்கள் பெறப்பட்டது.

இறுதி நாளான இன்று, பெதப்பம்பட்டி உள்வட்டத்திற்கு உட்பட்ட, மூங்கில் தொழுவு, வாகத்தொழுவு, வீதம்பட்டி, கொங்கல் நகரம், சோமவாரபட்டி, தொட்டம்பட்டி, முக்கூட்டு ஜல்லிபட்டி, கொசவம்பாளையம், அணிக்கடவு, விருகல்பட்டி, புதுப்பாளையம், இலுப்ப நகரம், பண்ணைக்கி-ணறு ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது.

- நிருபர் குழு -






      Dinamalar
      Follow us