/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்கள் தொடர்பு முகாமில் 597 பேருக்கு நலத்திட்ட உதவி
/
மக்கள் தொடர்பு முகாமில் 597 பேருக்கு நலத்திட்ட உதவி
மக்கள் தொடர்பு முகாமில் 597 பேருக்கு நலத்திட்ட உதவி
மக்கள் தொடர்பு முகாமில் 597 பேருக்கு நலத்திட்ட உதவி
ADDED : ஜன 31, 2024 10:32 PM

பொள்ளாச்சி- பொள்ளாச்சி அருகே நடந்த மக்கள் தொடர்பு முகாமில், ஒரு கோடியே, 23 லட்சத்து, ஐந்தாயிரத்து, 623 ரூபாய் மதிப்பீட்டில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பொள்ளாச்சி அருகே ராசக்காபாளையத்தில், மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகித்தார். சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா, எம்.பி., சண்முகசுந்தரம், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
முகாமில், இலவச வீட்டுமனைப்பட்டா, இ - பட்டா, நத்தம் பட்டா உள்ளிட்டவையும், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் வாயிலாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மொத்தம், 597 பயனாளிகளுக்கு, ஒரு கோடியே, 23 லட்சத்து, ஐந்தாயிரத்து, 623 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, மாவட்ட கலெக்டர், நிருபர்களிடம் கூறியதாவது:
மக்கள் தொடர்பு முகாமில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தற்போது, மாவட்டத்தில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகின்றன.
அதில், காப்பீட்டு திட்ட அட்டை இல்லாதவர்களுக்கு அட்டை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மக்களுடன் முதல்வர் முகாமில், 70ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் வந்தன. அவற்றின் மீது தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு, தெரிவித்தார்.