/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நலத்திட்ட உதவி
/
ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நலத்திட்ட உதவி
ADDED : ஜூலை 03, 2025 08:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பெத்தநாயக்கனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பொள்ளாச்சி ரோட்டரி கிளப் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, கிளப் தலைவர் சதீஷ்சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் ஸ்ரீகாந்த் முன்னிலை வகித்தார்.
ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, பெட்ஷீட், பெட், தலையணை, பிரின்டர், வாஷிங்மெஷின் என, 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டது. இதனை, தலைமை மருத்துவர் யாசர், டாக்டர் கார்த்திக் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். ரோட்டரி கிளப் நிர்வாகி பாலசுப்ரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.