/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மத்திய அரசின் நலத்திட்டங்கள்; கிராமங்களில் வாகன பிரசாரம்
/
மத்திய அரசின் நலத்திட்டங்கள்; கிராமங்களில் வாகன பிரசாரம்
மத்திய அரசின் நலத்திட்டங்கள்; கிராமங்களில் வாகன பிரசாரம்
மத்திய அரசின் நலத்திட்டங்கள்; கிராமங்களில் வாகன பிரசாரம்
ADDED : ஜன 08, 2024 10:57 PM

சூலுார்;மத்திய அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், சூலுார் வட்டார கிராமங்களில் வாகன பிரசாரம் நடந்தது.
மத்திய அரசின் திட்டங்களை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில், 'விக் ஷித் பாரத் சங்கல்ப் யாத்ரா' எனும் வாகன பிரசாரம் நாடு முழுவதும் நடந்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, சூலுார் வட்டாரத்தில் பதுவம்பள்ளி, காடுவெட்டி பாளையம், கிட்டாம்பாளையம், கணியூர் உள்ளிட்ட பகுதிகளில் வாகன பிரசாரம் நடந்தது.
'நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்' என்ற தலைப்பில் வரும், 2047ல் பாரதத்தை வளர்ச்சி அடைந்த தற்சார்பு உள்ள நாடாக மாற்ற உறுதி மொழி ஏற்கப்பட்டது.
வேளாண்துறை, சுகாதாரத்துறை, தபால் துறை உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த அலுவலர்கள், தங்கள் துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவரித்தனர். நலத்திட்டங்களை பெறுவது எப்படி என்பது குறித்தும், அதற்கான தகுதிகள் குறித்தும் விளக்கினர். விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் டிரோன்கள் செயல்பாடுகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. நலத்திட்ட உதவிகள் மூலம் பயன் பெற்ற பயனாளிகளின் கருத்துகள் பதிவு செய்யப்பட்டன.
எல்.இ.டி. திரையில் நலத்திட்டத்தால் பயனடைந்த பயனாளிகளின் கருத்துக்கள் ஒளிபரப்பப்பட்டன. அனைவருக்கும் திட்டங்களை விளக்கும் காலண்டர்கள் வழங்கப்பட்டன. ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.