/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டேபிள் டென்னிஸ் போட்டி வீரர், வீராங்கனைகள் சபாஷ்
/
டேபிள் டென்னிஸ் போட்டி வீரர், வீராங்கனைகள் சபாஷ்
ADDED : ஜூன் 02, 2025 11:32 PM
கோவை: கோவை மாவட்ட அளவிலான ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி, சரவணம்பட்டியில் நடந்தது. இதில், குழந்தைகள், பெரியவர்கள் உட்பட, 50க்கும் மேற்பட்ட மாவட்ட, மாநில வீரர்கள் பங்கேற்றனர்.
'லீக்' மற்றும் 'நாக் அவுட்' முறையில் போட்டிகள் நடந்தன. பல்வேறு சுற்றுக்களை அடுத்து நடந்த முதல் அரையிறுதியில் வீரர் நரேஷ், 11-8, 9-11, 11-9, 8-11, 11-8 என்ற புள்ளிகள் கணக்கில் வீரர் யோகிதாவை வீழ்த்தினார்.
இரண்டாம் அரையிறுதியில், வீரர் சுதேஷ்னா, 15-13, 11-7, 11-7 என்ற புள்ளிகள் கணக்கில் வீரர் சர்வேஷை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
பரபரப்பான இறுதிப் போட்டியில் வீரர் நரேஷ், 8-11, 11-7, 11-8, 9-11, 12-10 என்ற புள்ளிகளில் வீரர் சுதேஷ்னாவை வீழ்த்தி, முதல் பரிசை தட்டினார்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், தனித்திறமையை வெளிப்படுத்திய வீரர்கள், அடுத்த கட்டத்துக்கு செல்லும் விதமாக தொடர் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.