ADDED : பிப் 08, 2024 11:08 PM

கோவை -கிருஷ்ணா கல்லுாரியில் நடந்த பேராசிரியர்களுக்கான விளையாட்டு போட்டிகளில், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற, அவிநாசிலிங்கம் பல்கலை பேராசிரியர்களை பல்கலை நிர்வாகம் வாழ்த்தியது.
ஸ்ரீ கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில், கல்லுாரி பேராசிரியர்களுக்கு மாநில அளவிலான ஸ்போர்ட்ஸ் அண்ட் கேம்ஸ் போட்டிகள் கல்லுாரி வளாகத்தில் நடத்தப்பட்டன. சுமார் 25 கல்லுாரிகளை சேர்ந்த 180க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற போட்டியில், அவிநாசிலிங்கம் பல்கலை அணி, 64 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது.
அணியினரை, அவிநாசிலிங்கம் பல்கலையின் துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர், பதிவாளர் கவுசல்யா, 'டீன்' இந்து, உடற்கல்வித்துறை தலைவர் மணிதாமணி, உடற்கல்வி இயக்குனர் நந்தினி மற்றும் அனைத்து துறை தலைவர்கள் பாராட்டினர்.
