/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரி மாணவி போல் மேலும் சிலர் பாலியல் பலாத்காரமா? சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை

ADDED : நவ 09, 2025 12:41 AM
கோவை: கல்லுாரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த மூவர், இதற்கு முன் மேலும் பலரை பலாத்காரம் செய்துள்ளார்களா என, போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவையில் கடந்த, 2ம் தேதி இரவு விமான நிலையத்தின் பின்புறம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த கல்லுாரி மாணவி, மூன்று நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
போலீஸ் விசாரணையில், அங்குள்ள அரசு பாலிடெக்னிக்கின் காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்துச் சென்று, அங்குள்ள பாழடைந்த மோட்டார் அறையில், மாணவியை கூட்டு பலாத்காரம் செய்தது தெரிந்துள்ளது.
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஸ், 30, அவரது சகோதரர் கார்த்திக், 21, இவர்களது தூரத்து உறவினர் மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த குணா, 20 ஆகிய மூவரை, போலீசார் மறுநாள் சுட்டுப் பிடித்தனர்.
பழைய குற்றவாளிகள் சம்பவம் நடந்ததாக கூறப்படும் மோட்டார் அறை குறித்து, ஏற்கனவே தெரிந்திருப்பதால், அங்கு இதற்கு முன் வேறு பெண்களையும், பாலியல் பலாத்காரம் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.
மோட்டார் அறை மற்றும் அப்பகுதியில் கைரேகை நிபுணர்கள் பல்வேறு தடயங்களை சேகரித்து உள்ளனர்.
மோட்டார் அறைக்கு போலீசார் 'சீல்' வைத்துள்ளனர். சுட்டு பிடிக்கப்பட்ட மூவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் மொபைல்போன்களில் உள்ள விவரங்களை, போலீசார் விசாரிக்கின்றனர்.