/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேற்கு வங்க வாலிபர் அடித்து கொலை : வங்கதேச எல்லையில் ஒருவரை கைது செய்தது போலீஸ்
/
மேற்கு வங்க வாலிபர் அடித்து கொலை : வங்கதேச எல்லையில் ஒருவரை கைது செய்தது போலீஸ்
மேற்கு வங்க வாலிபர் அடித்து கொலை : வங்கதேச எல்லையில் ஒருவரை கைது செய்தது போலீஸ்
மேற்கு வங்க வாலிபர் அடித்து கொலை : வங்கதேச எல்லையில் ஒருவரை கைது செய்தது போலீஸ்
ADDED : ஆக 11, 2025 11:52 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் மேற்கு வங்கத்தை சேர்ந்த கட்டட தொழிலாளியை கொலை செய்த வரை, வங்க தேச எல்லைக்கு சென்ற கிழக்கு போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே, சின்னாம்பாளையம் டாஸ்மாக் மதுபான கடை செல்லும் வழியில், தனியார் ஆட்டோ கேரஜ் அருகே, புதரில், 30 வயது மதிக்கத்தக்க நபர் மர்மமான முறையில் கடந்த மாதம், 31ம் தேதி இறந்து கிடந்தார்.
அவரது உடலை மீட்டு கிழக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மேற்கு வங்கம் மாநிலம், பெகுலாவை சேர்ந்த கட்டட தொழிலாளி ராகேஷ்தாஸ்,30, என்பதும், பிரமதாபிஸ்வாஸ்,45, மற்றும் சிலர் ராகேஷ் தாைஸ கொலை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, எஸ்.ஐ., கவுமதன் தலைமையிலான போலீசார், மேற்கு வங்கத்துக்கு தப்பியோடிய பிரமதாபிஸ்வாைஸ கைது செய்ய சென்றனர். மேற்கு வங்கத்தில் வங்கதேச எல்லையில் அவரை கைது செய்து, விமானம் வாயிலாக நேற்று பொள்ளாச்சிக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
போலீசார் கூறுகையில், 'வடமாநில பகுதியை சேர்ந்த ராகேஷ்தாஸ், பிரமதாபிஸ்வாஸ் உள்ளிட்ட ஐந்து பேர், பொள்ளாச்சியில் தங்கி கட்டட வேலைக்கு சென்று வந்தனர்.
அவர்கள் ஒன்றாக அமர்ந்து மது குடிப்பது வழக்கம். சம்பவத்தன்று அதே போல மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டுள்ளது.
ராகேஷ்தாஸிடம் மது கேட்டு வாங்கி தராததால், நான்கு பேரும் சேர்ந்து அவரை தாக்கியுள்ளனர். அதில், சம்பவ இடத்திலேயே ராகேஷ்தாஸ் இறந்தார்.
இதையறிந்த, நான்கு பேரும் தப்பியோடினர். மேற்கு வங்கத்தில், வங்கதேச எல்லைக்கு தப்பி சென்ற பிரமதா பிஸ்வாைஸ கைது செய்துள்ளோம்.
மீதம் உள்ள, மூவரை தேடி வருகிறோம்,' என்றனர்.

