/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேற்கு குறுமைய சதுரங்க போட்டி; அரசுப் பள்ளி மாணவர்கள் அபாரம்
/
மேற்கு குறுமைய சதுரங்க போட்டி; அரசுப் பள்ளி மாணவர்கள் அபாரம்
மேற்கு குறுமைய சதுரங்க போட்டி; அரசுப் பள்ளி மாணவர்கள் அபாரம்
மேற்கு குறுமைய சதுரங்க போட்டி; அரசுப் பள்ளி மாணவர்கள் அபாரம்
ADDED : ஆக 11, 2025 09:10 PM
கோவை; பள்ளிக் கல்வி துறை மேற்கு குறுமைய விளையாட்டுப் போட்டியின் ஒரு பகுதியாக, அஜ்ஜனுார் பாரதீய வித்யா பவன் மெட்ரிக் பள்ளி வளாகத்தில், சதுரங்கப் போட்டி நடந்தது. 42 பள்ளிகளை சேர்ந்த, 331 மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியை, பள்ளி முதல்வர் மகேஸ்வரி துவக்கிவைத்தார்.
ஆறு சுற்றுகளாக போட்டி நடந்தது. முடிவில், 11 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில், தேஜஸ்வின், கிருத்விக், ஓம் பிரகாஷ் ஆகியோரும், மாணவியர் பிரிவில் யாழினி, சிவமித்ரா(கல்வீரம்பாளையம் மாநகராட்சி பள்ளி), ஸ்ரீமதி (பச்சாபாளையம், பஞ்சாயத்து யூனியன் பள்ளி) ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
தொடர்ந்து, 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் தயானந்த்(சுண்டப்பாளையம் அரசுப்பள்ளி), பிரனேஷ்(மத்வராயபுரம் அரசுப்பள்ளி), தனுஜ் ஆகியோர் முதல் மூன்று இடங்களை வென்றனர்.
மாணவியர் பிரிவில் சுருதி, மதுபாலா(மத்வராயபுரம் அரசுப்பள்ளி), ஜெமிமாடெலிசியா ஆகியோரும், 17 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில், இக்ரம் உல்சருலா, மிதுனேஷ் (மத்வராயபுரம் அரசுப்பள்ளி), ஸ்ரீசாய் ஆகியோர் முதல் மூன்று இடங்களை தட்டிசென்றனர்.
மாணவியர் பிரிவில் நிகுலா ஸ்ரீ(சுண்டப்பாளையம் அரசுப்பள்ளி), நந்தனா, நவ சுஜா ஆகியோரும், 19 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் ரிஷி கிருஷ்ணன், புவனேஷ், ரஹத்ரேசா ஆகியோரும், மாணவியர் பிரிவில் தர்ஷி னி (நரசீபுரம் அரசுப்பள்ளி), கங்கமித்ரா, ஸ்வேதா ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை தட்டிச் சென்றனர்.