ADDED : மார் 14, 2026 06:18 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேற்கு புறவழிச்சாலை அமைக்க கடந்த, 2017 - 18ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில், பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, 73 கோடியே, 36 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த சாலை, கோவை ரோடு ஆச்சிப்பட்டி சக்தி மில் அருகே துவங்கி, சங்கம்பாளையம், ஆர்.பொன்னாபுரம், தாளக்கரை, ஜமீன்முத்துார், நல்லுார் வழியாக, ஜமீன் ஊத்துக்குளி கைகாட்டி வரை, 8.9 கி.மீ., துாரத்துக்கு, 10 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படுகிறது.
இந்த புறவழிச்சாலை பணிக்காக, விவசாயிகள் உள்ளிட்ட தனியாரிடம் இருந்து, 3,512 ெஹக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. பணிகள் நிறைவடைந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதையடுத்து, சப் - கலெக்டர் ராமகிருஷ்ணசாமி, கொடி அசைத்து வாகன இயக்கத்தை துவக்கி வைத்தார். கோட்ட பொறியாளர் (திட்டம்) சுஜாதா வரவேற்றார். நகராட்சி தலைவர் சியாமளா, துணை தலைவர் கவுதமன், திருமூர்த்தி திட்டக்குழு தலைவர் பரமசிவம் முன்னிலை வகித்தனர். உதவி கோட்ட பொறியாளர் கவுசல்யா, உதவி பொறியாளர் முகமது அஸ்தாக் மற்றும் பலர் பங்கேற்றனர்.
