/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேற்கு குறுமைய போட்டி; சாம்பியன்கள் யார்?
/
மேற்கு குறுமைய போட்டி; சாம்பியன்கள் யார்?
ADDED : ஆக 07, 2025 09:32 PM

கோவை; கோவை நேரு ஸ்டேடியத்தில் மேற்கு குறுமைய போட்டிகள் இரு நாட்கள் நடந்தன. இதில், 100 மீ., 200 மீ., நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
போட்டிகளின் நிறைவில், தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டத்தை(14 வயதுக்குட்பட்டோர் பிரிவில்)சாவரா பள்ளி மாணவர் கமலக்கண்ணன், 13 புள்ளிகளுடனும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஸ்ரீ ராகவேந்திரா வித்யாலயா பள்ளி மாணவர் பிரதேந்தர் மற்றும் சாவரா பள்ளி மாணவர் ஸ்ரீசாய் ஆகியோர் தலா, 15 புள்ளிகளுடன் தட்டி சென்றனர்.
அதேபோல், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ராகவேந்திரா வித்யாலயா பள்ளி மாணவர் ரஞ்சித், 15 புள்ளிகளுடனும் தனிநபர் சாம்பியன்ஷிப் வென்றார். 14 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில்,பிரீமியர் வித்யா விகாஷ் பள்ளி மாணவி நிதர்சனா, 10 புள்ளிகளுடன் தனிநபர் சாம்பியன்ஷிப் வென்றார்.
அதேபோல், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில், சாவரா பள்ளி மாணவியர் தர்ஷினி மற்றும் மோனிகாஸ்ரீ ஆகியோர் தலா, 15 புள்ளிகளுடனும், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சாவரா பள்ளி மாணவி ஜெனிபர் கேத்தரின் மற்றும் பிலெசி ஆகியோர் தலா, 15 புள்ளிகளுடனும் தனி நபர் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிசென்றனர்.