/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பல்லுயிர் வளங்களை காக்கும் ஈர நிலங்கள்! பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு
/
பல்லுயிர் வளங்களை காக்கும் ஈர நிலங்கள்! பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு
பல்லுயிர் வளங்களை காக்கும் ஈர நிலங்கள்! பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு
பல்லுயிர் வளங்களை காக்கும் ஈர நிலங்கள்! பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு
ADDED : ஜன 29, 2024 11:15 PM

ஆனைமலை:ஈர நிலங்களை பாதுகாப்பதன் வாயிலாக, பல்லுயிர் வளங்கள் பாதுகாக்கப்படுகிறது, என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆனைமலை அருகே, ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., மேல்நிலைப்பள்ளியின் தேசிய பசுமைப் படை சார்பில், உலக ஈர நிலங்கள் தின விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. பிரசாரத்தை பள்ளியின் தலைமை ஆசிரியர் கிட்டுச்சாமி துவக்கி வைத்து, ஈர நிலங்கள் பாதுகாப்பதன் அவசியம் பற்றி மாணவர்களுக்கு விளக்கினார்.
விழிப்புணர்வு பிரசாரம் பள்ளியின் அருகாமையில் உள்ள ரெட்டியாரூர், அர்த்தநாரிபாளையம் கிராமங்களில் நடந்தது. மாணவர்கள், பொது மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளியின் தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் பாலசுப்ரமணியன் உடன் சென்றார்.
ஆசிரியர்கள் கூறியதாவது:
தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ நீரால் மூடப்பட்டு இருக்கும் இடங்கள், ஈர நிலங்களாகும். சேற்று நிலம், சகதி, முற்றா நிலக்கரியுள்ள நிலம், நீர் நிலைகள் ஆகியவை ஈர நிலங்கள் எனப்படும்.
ஈர நிலங்களை பாதுகாப்பதன் வாயிலாக, பல்லுயிர் வளங்கள் மற்றும் கலாசாரம் பாதுகாக்கப்படுகிறது. அதிக மழை கிடைக்கும் காலங்களில், வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் பாதுகாக்கின்றன. புயல் காலங்களில் ஏற்படும் கரையோர மண் அரிப்பை ஈரநிலங்கள் தடுக்கின்றது. தரைக்கு கீழ் நீரின் தரத்தை பாதுகாக்கிறது.
நீரை துாய்மையாக்குதல் இந்நிலங்களின் முக்கிய பங்களிக்கின்றன. ஈர நிலத்தில் மேற்பரப்பு, நீரில் கரையும் ரசாயனங்களை நீக்கும் ஒரு வடிகட்டியாக செயல்படுகிறது. இடம் சார் காலநிலை, நுண்கால நிலை ஆகியவற்றின் தன்மைகளை பேணி காத்து, மிதமான வெப்ப நிலை நிலவுவதற்கு ஈர நிலங்கள் உதவுகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.