/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய வீடு வாங்குவதற்கு முன் ஆய்வு செய்வதால் நமக்கு என்னென்ன நன்மைகள்?
/
புதிய வீடு வாங்குவதற்கு முன் ஆய்வு செய்வதால் நமக்கு என்னென்ன நன்மைகள்?
புதிய வீடு வாங்குவதற்கு முன் ஆய்வு செய்வதால் நமக்கு என்னென்ன நன்மைகள்?
புதிய வீடு வாங்குவதற்கு முன் ஆய்வு செய்வதால் நமக்கு என்னென்ன நன்மைகள்?
ADDED : பிப் 03, 2024 12:24 AM

ஒரு வீட்டை விலை கொடுத்து வாங்குவதற்கு முன்பு, அதன் சுற்றுப்புற சூழ்நிலை கட்டட அமைப்பு உள்ளிட்ட சாத்தியக்கூறுகளை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
இது குறித்து, கோயம்புத்தூர் மாவட்டஅனைத்து கட்டுமான பொறியளர்கள் சங்கம் (காட்சியா) உறுப்பினர் சரவணகுமார் கூறியதாவது:
வீட்டுப் பரிசோதனை என்பது, ஒரு சான்றளிக்கப்பட்ட வீட்டு ஆய்வாளரால் நடத்தப்படும் சொத்தின் நிலையைப் பற்றிய மதிப்பீடாகும்.
ஆய்வின் போது, கட்டமைப்பு, பிளம்பிங், மின் அமைப்பு உள்ளிட்ட பல விபரங்கள் உள்ளிட்ட, சொத்தின் பல்வேறு அம்சங்களை, ஆய்வு செய்வார்.
நடுநிலையான எந்த சார்பும் அல்லாத, சொத்து மதிப்பீடு வழங்கப்படுவதால், வீடு வாங்குபவர்களுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. மறைக்கப்பட்ட அல்லது வெளிப்படுத்தப்படாத பல விஷயங்கள், வெளியே தெரிய வருகின்றன.
ஆய்வாளர்கள் வீட்டுச் சோதனையின் போது, சொத்தின் பல்வேறு பகுதிகளை மதிப்பிடுவர். மேற்கூரை, தரைதளம், சுவர், ஜன்னல், கதவுகளை ஆய்வு செய்வர். மின்சாரம் மற்றும் பிளம்பிங் அமைப்புகளையும் ஆய்வு செய்வர். காற்றோட்டத்தையும் வீட்டின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்துக்கு பங்களிக்கும் பிற விஷயங்களையும் மதிப்பீடு செய்வர்.
ஆய்வின் வாயிலாக சொத்தின் கட்டமைப்பு வரைபடம் மற்றும் கட்டடக்கலை வடிவமைப்பு தரம். கட்டப்பட்ட வீட்டின் மொத்த அளவு, காலி இடத்தின் பரப்பளவு, பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்களின் அளவு, தரம் ஆகியவை தெளிவாக தெரியவரும். இதன் விளைவாக, வீட்டை விற்பவர் மற்றும் பழுது சரிசெய்பவருடன் பேச்சு நடத்தலாம்.
புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு பரிசோதனை அவசியமா என்று, அனைவர் மத்தியிலும் சந்தேகம் எழுவது சகஜம். ஆனால் வீட்டை வாங்கும் முன், நிபுணர்களின் ஆய்வு மற்றும் ஆலோசனையுடன் வீட்டை வாங்கலாம்; நிம்மதியாக வாழலாம்.

