/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விதை நேர்த்தியால் என்ன பயன்? விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
/
விதை நேர்த்தியால் என்ன பயன்? விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
விதை நேர்த்தியால் என்ன பயன்? விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
விதை நேர்த்தியால் என்ன பயன்? விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
ADDED : மார் 20, 2025 05:55 AM
சூலுார் : 'மண் வாயிலாக பரவும் நோய்கள், சேமிப்பு விதைகளை தாக்கும் பூச்சிகளால் ஏற்படும் பாதிப்புகளை விதை நேர்த்தியால் கட்டுப்படுத்தலாம்' என, விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
சுல்தான்பேட்டையில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு பயிற்சி முகாம் நடந்தது. இதில், சுற்றுவட்டார விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.
திருச்சி மத்திய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மைய உதவி பயிர் பாதுகாப்பு அதிகாரி அமுதா, விதை நேர்த்தியின் முக்கியத்துவம் குறித்து பேசியதாவது:
விதை நேர்த்தி என்பது பூஞ்சாணக் கொல்லி, பூச்சிக்கொல்லி போன்றவற்றை தனித்தோ அல்லது ஒருங்கிணைத்தோ விதைகளின் மேல் இடுவது ஆகும். இவ்வாறு செய்வதால், மண் வாயிலாக பரவும் நோய்கள், மற்றும் சேமித்து வைத்திருக்கும் விதைகளை தாக்கும் பூச்சிகளால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம். விதை நேர்த்தி செய்வதால் பயிரில் நோய்கள் பரவாமல் தடுக்கிறது. விதை அழுகல், மற்றும் நாற்று அழுகல் போன்றவற்றில் இருந்து காக்கிறது. முளைப்பு திறனை மேம்படுத்துகிறது. சேமிப்பில் உள்ள விதைகளை தாக்கும் பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்கும். மண்ணில் உள்ள பூச்சிகளை கட்டுப்படுத்தி பயிர் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும்.
இவ்வாறு, அவர் பேசினார்.