/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு துறைகளில் வேலை வாய்ப்புகள் என்னென்ன?
/
அரசு துறைகளில் வேலை வாய்ப்புகள் என்னென்ன?
ADDED : செப் 18, 2024 10:46 PM
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், அரசு துறைகளில், என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளது என்பது குறித்து, மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியின், வேலைவாய்ப்பு மையத்தின் சார்பில், அரசு துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றிய அறிமுக நிகழ்வு, நேற்று கல்லூரியில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில், வெலிங்டன் ராணுவ மைய பாதுகாப்புத்துறை நிதி ஆலோசகர் சத்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கல்லூரியின் வேலைவாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளர் பிருந்தா மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில், வெலிங்டன் ராணுவ மைய பாதுகாப்புத்துறை நிதி ஆலோசகர் சத்யராஜ் பேசுகையில், இந்திய குடிமைப் பணி தேர்வுகளுக்காக, மாணவர்கள் தங்களை ஒருநிலைப்படுத்தி தயார் செய்து கொள்ள வேண்டும். மத்திய மாநில அரசுகளில், பல்வேறு படிநிலைகளில் உள்ள வேலை வாய்ப்புகளுக்கு போட்டி தேர்வு நடைபெறுகிறது.
என்.டி.ஏ., சி.டி.எஸ்., டி.ஜி.சி., டி.இ.எஸ்., போன்ற போட்டி தேர்வுகள், ஒன்று முதல் இரண்டு முறை நடக்கிறது. இதற்கு பிளஸ் 2 முதல் இளநிலை பட்டப்படிப்பு வரை மட்டுமே கல்வித்தகுதி. இதற்கு, மாணவர்கள் தங்களை அர்ப்பணித்து தயார் செய்தால், நிச்சயம் வேலைவாய்ப்பில் வெற்றி பெறலாம், என்றார்.