/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டுமான பொருள் பாதுகாப்புக்கு என்னென்ன வழிமுறைகள்?
/
கட்டுமான பொருள் பாதுகாப்புக்கு என்னென்ன வழிமுறைகள்?
கட்டுமான பொருள் பாதுகாப்புக்கு என்னென்ன வழிமுறைகள்?
கட்டுமான பொருள் பாதுகாப்புக்கு என்னென்ன வழிமுறைகள்?
ADDED : பிப் 09, 2024 11:55 PM

பெரும்பாலான சமயங்களில் கட்டுமான பணிகளில், கட்டுமான பொருட்களில் தரத்தை உறுதி செய்ய கவனமாக இருக்கிறோம். ஆனால், கட்டுமான பொருட்களை இருப்பு வைப்பதில், எந்த அளவுக்கு தரத்தை உறுதி செய்கிறோம் என்பது, கேள்விக்குறியே.
கட்டுமான பணிகளுக்கு தேவையான பொருட்களை, உரிய அளவுகளில் வாங்கினால் போதும். அடுத்து வரும் மாதத்தில் விலை உயரும், என்று தெரியவரும் நிலையில், சிமென்ட் போன்ற பொருட்களை கூடுதல் விலைக்கு வாங்குவதை தவிருங்கள்.
இதில் விற்பனையாளருடன், பழைய விலைக்கு பொருட்களை வாங்க ஒப்பந்தம் செய்வது. முன்பதிவு செய்வது போன்றவற்றில் நாம் இறங்கலாம்.
வாங்கிய கட்டுமான பொருட்களை, பயன்படுத்தும் வரை பாதுகாப்பான சூழலில் வைக்க வேண்டும். கட்டுமான பணிகள் போன்று, கட்டுமான பொருட்களை பாதுகாப்பதிலும், புதிய நடைமுறைகள் வந்துவிட்டன. பல்வேறு நாடுகளிலும், ஒரே மாதிரியான வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. குறிப்பாக, 'பிபோ' என்ற நடைமுறை, இதில் மிகவும் பிரபலமானதாக உள்ளது.
அதாவது, 'பர்ஸ்ட் இன் -பர்ஸ்ட் அவுட்' என்பதே, இதன் அடிப்படையாகும். இதன்படி, முதலில் வந்த பொருளை, முதலில் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு, பொருட்கள் வருவதிலும், பயன்படுத்துவதிலும் ஒரு ஒழுங்குமுறையை பின்பற்றினால், நீண்ட நாட்களுக்கு பொருட்கள் தேங்குவது தவிர்க்கப்படும்.