sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வீடுகளுக்குள் மழைநீர் புகுவதை தடுக்க என்ன செய்யலாம்?:நகர்ப்புற வளர்ச்சி அதிகாரிகள் குழு ஆய்வு

/

வீடுகளுக்குள் மழைநீர் புகுவதை தடுக்க என்ன செய்யலாம்?:நகர்ப்புற வளர்ச்சி அதிகாரிகள் குழு ஆய்வு

வீடுகளுக்குள் மழைநீர் புகுவதை தடுக்க என்ன செய்யலாம்?:நகர்ப்புற வளர்ச்சி அதிகாரிகள் குழு ஆய்வு

வீடுகளுக்குள் மழைநீர் புகுவதை தடுக்க என்ன செய்யலாம்?:நகர்ப்புற வளர்ச்சி அதிகாரிகள் குழு ஆய்வு


UPDATED : ஜன 05, 2026 10:48 AM

ADDED : ஜன 05, 2026 05:30 AM

Google News

UPDATED : ஜன 05, 2026 10:48 AM ADDED : ஜன 05, 2026 05:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்:குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்து விடுவதை தடுக்க, சென்னையில் இருந்து வந்த தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அதிகாரிகள், அன்னூரில் ஆய்வு செய்தனர்.

அன்னூர் பேரூராட்சியில், தர்மர் கோவில் வீதி, புவனேஸ்வரி நகர், பழனி கிருஷ்ணா அவென்யூ பகுதியில், மழைக்காலங்களில் குடியிருப்புக்குள் மழை நீர் மற்றும் குளத்து நீர் புகுந்து விடுகிறது.

இதற்கு நிரந்தர தீர்வு காண, நிதி ஒதுக்க பேரூராட்சி சார்பில், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேருவிடம் நேரில் மனு அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக பொது மேலாளர் முருகன் தலைமையில், அதிகாரிகள் அன்னூர் வந்தனர்.

அன்னூர் குளத்தின் கொள்ளளவு, தேங்கியுள்ள நீர், மதகுகள், மழை நீர் வெளியேறும் பகுதி, அன்னூரில் மழை அளவு உள்ளிட்ட விவரங்களை கேட்டு அறிந்தனர். பொது மேலாளர் முருகன் பேசுகையில், குளத்தில் ஓரளவு நீர் தேங்கும் போதே தெற்கு புற மதகை சீரமைத்து, திறந்து, தர்மர் கோவில் வீதி, இட்டேரி வீதி வழியாக நீரை வெளியேற்றலாம். மீதி உள்ள நீரை இரண்டாவது ஷட்டரை திறந்து குளத்து நீர் செல்லும்படி செய்யலாம், என்றார்.

பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் பேசுகையில், மழை நீர் மற்றும் குளத்து நீர் குடியிருப்புகளுக்குள் செல்லாமல், கிழக்கே செல்ல வடிகால் அமைக்க இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும், என்றார்.

அதிகாரிகள் குழு, தர்மர் கோயில் வீதி, இட்டேரி வீதி, நாகமாபுதூர், பனந்தோப்பு மயில், அல்லிகுளம் சாலை பகுதிகளில் ஆய்வு செய்தது. விரைவில் விரிவான திட்ட அறிக்கை தரும்படி பொறியாளர்களிடம் அறிவுறுத்தியது.

ஆய்வில், துணைத் தலைவர் விஜயகுமார், செயல் அலுவலர் கார்த்திகேயன், நிர்வாக பொறியாளர் மோகன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அம்சராஜ், கவுன்சிலர்கள் கார்த்திகேயன், மணிகண்டன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us