/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பக்கவாதம் ஏற்படுவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
/
பக்கவாதம் ஏற்படுவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
ADDED : அக் 29, 2024 11:52 PM

கோவை: உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு, கோவை கே.ஜி.மருத்துவமனை சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி, மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்தது.
மருத்துவமனை தலைவர் பக்தவத்சலம் பேசியதாவது:
பக்கவாதம் ஏற்படாமல் இருக்க, அனைத்து விஷயத்தையும் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும். எதையும் எதிர்கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதிகம் டென்ஷன் ஆகக்கூடாது. பக்கவாதம் ஏற்பட புகைபிடித்தல், கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு நிறைந்த உணவு உட்கொள்தலும் காரணம். பக்கவாதம் ஏற்பட்டவர்களை இரண்டு மணி நேரத்துக்குள், மருத்துவமனைக்கு அழைத்து வந்தால் காப்பாற்றி விடலாம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மருத்துவமனை துணைத்தலைவர் வசந்தி ரகு, தலைமை வகித்தார். மருத்துவமனை நரம்பியல் நிபுணர் ராமகிருஷ்ணன், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக, மருத்துவமனை சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில், விழிப்புணர்வு வாக்கத்தான் நடந்தது.