/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விடுமுறையில் மாணவர்கள் என்ன செய்யலாம்
/
விடுமுறையில் மாணவர்கள் என்ன செய்யலாம்
ADDED : மார் 28, 2025 10:15 PM
அன்னுார்; பள்ளி மாணவர்கள் விடுமுறையை பயனுள்ள முறையில் செலவிடலாம்.
பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்துள்ளது. மாணவர்கள் விடுமுறை நாட்களை வீணடிக்காமல் பயனுள்ளதாக மாற்ற வேண்டும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும். ஆர்வம், குடும்ப சூழ்நிலை, வசதி வாய்ப்பை பொறுத்து தேர்வு செய்யலாம்.
முதலாவது பொழுதுபோக்கு உங்கள் நோக்கம் என்றால், ஆன்மீக சுற்றுலா, உறவினர்களின் வீடுகளுக்கு செல்வது, நல்ல புத்தகங்கள் படிப்பது, செஸ், கேரம் ஆடுவது, யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகள் செய்வது என ஈடுபடலாம்.
இரண்டாவது கல்வி சார்ந்த பயிற்சி கற்றுக்கொள்ள நேரத்தை செலவு செய்யலாம். கம்ப்யூட்டர் வகுப்பு, டைப் ரைட்டிங், அழகு கலை பயிற்சி, நடனம், இசைக்கருவிகள் வாசிப்பது என தனி திறன்களை வளர்த்துக் கொள்ளலாம். இந்த இரண்டு முறையையும் தேர்ந்தெடுக்க முடியாத மாணவர்கள் அருகில் எளிதான வேலைக்கு சேரலாம். வேலை தேடும் நண்பர்களை உடன் அழைத்துக் கொள்ளலாம். வேலைக்கு செல்வது நம்மை மேம்படுத்திக் கொள்ளவும், பெற்றோருக்கு உதவவும் பயன்படும்.
விடுமுறை நாட்களில் வேலைக்கு செல்வது தவறில்லை. உழைப்பின் அனுபவத்தை பணத்தால் பெற முடியாது. படிப்பிலும் வாழ்க்கையிலும் சிறந்த நிலையை அடைந்த தலைவர்கள் பலர் பள்ளி பருவத்தில் கஷ்டப்பட்டவர்கள் தான் என்கிறார் அன்னுார், அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சுரேஷ்.